தேசிய முன்னனி கட்சியின் உதவித்தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியம் – பிரதமர் அதிரடி அறிவிப்பு

0
801

புத்ராஜெயா (Mytimes) – ம.இ.கா கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தேசிய முன்னனி கட்சியின் (Barisan Nasional) உதவித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள், இன்று தேசிய முன்னனி கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் அறிவித்தார்.
புதியதாக ம.இ.கா கட்சியின் தேசிய தலைவராக பதவியேற்ற இவருக்கு வலுசேர்க்கும் வண்ணம் இந்த நியமனம் அமைந்துள்ளது. இந்தியர்களின் பிரதிநிதியாக விளங்கும் ம.இ.கா கட்சியின் தலைவர், தேசிய முன்னனி கட்சிக்கு உதவித்தலைவராக நியமிக்கப்பட்டது இந்தியர்களுக்கு பெருமைக்கூடிய தகவலாக கருதப்படுகின்றது. சிறந்த தலைமைத்துவ ஆற்றல் கொண்ட டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாது , அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த தலைவராக விளங்குவர் என்று கருதபடுகின்றது.(Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •