டெங்கில் (Mytimes) – 8 செப்டம்பராகிய இன்று தேசிய ரீதியிலான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஆரம்பமாகிறது. ஆரம்பப் பள்ளிகளின் உச்ச கட்ட தேர்வாகிய யூ.பி.எஸ்.ஆர் , மாணவர்களின் ஆற்றல்களைக் கண்டறியும் தேர்வாக கருதப்படுகிறது. இன்று காலையில்  துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் டெங்கிலில் அமைந்துள்ள பெர்மாதா தமிழ்ப்பள்ளிகூடத்திற்கு  திடீர் சிறப்பு வருகைப் புரிந்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மொத்தம் 26 மாணவர்கள் இப்பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் இப்பள்ளிகூடதிற்கு சென்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி உற்சாகம் கொடுத்தது பாராட்டகூடிய செயலாகும்.காலையிலேயே நம்பிக்கையோடு பிள்ளைகளை தேர்வு எழுத வழியனுப்ப வந்திருந்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கமலநாதன் சந்தித்து பேசி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

kamal-8-9-15-1தொடர்ந்து தேர்வு மண்டபத்திற்கு சென்று மாணவர்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் கூறி தேர்வு எழுதுவதையும் கண்காணித்தார். இவரோடு  சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அதிகாரி சைனூரேன்  மற்றும் தேசிய தேர்வு இலாகா அதிகாரியும் உடன் இருந்து சிறப்பித்தனர்.

நமது மாணவர்கள் நமது கடமை என்ற உன்னத நோக்கத்தில் அனைவரும் நம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்து தூண்டுகோலாய் விளங்க வேண்டும். அவர்களின் வெற்றிக்கு அடிதளமாய் அமைய வேண்டும் நாம், அதற்காக கல்வி அமைச்சு என்றும் துணைப்புரியும் அதற்கு வழியும் வகுக்கும் என்று ஆணிதரமாய் நம்புவதாக கமலநாதன் கூறினார். தேசிய ரீதியில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு  எழுதும் அனைத்து மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.-Mytimes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here