மருத்துவர் சுப்ரமணியம் ம.இ.கா கட்சியின் அதிகாரபூர்வ தேசிய தலைவர் !

0
710

ஒரு அரசியல்வாதி என்று கூறுவதை விட மக்களோடு மக்களாக வாழ்ந்து கைராசிகார மருத்துவர் என்று பெயர்பதித்த டாக்டர் எஸ் சுப்ரமணியம் அதிகாரபூர்வமாக சட்டரிதீயாக ம.இ.கா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல போராட்டங்களையும் அவலநிலைகளையும் தாண்டி இன்று மீண்டும் மலேசிய இந்தியர்களின் தாய் கட்சியாக கருதப்படும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு புது திருப்புமுனையை அடைந்துள்ளது.

துன் சம்பந்தன் போன்ற மூத்த தலைவர்களின் உயிர் மூச்சாய் அமைந்த ம.இ.கா,  சில குறிப்பிட்ட தரப்பினரின் சுயநல பதவி போராட்திற்காக சந்தி சிரிக்கும் அளவிற்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று ஒரு கருப்பு சரித்திரத்தை உருவாக்கி விட்டது. இருப்பினும் கட்சி என்பது வெறும் பதவி மட்டுமல்ல அது மக்களுக்காக வழிநடத்தப்படும் மக்கள் சேவை மையம் என்று அடிப்படை நோக்கம் உணர்ந்த சில தலைவர்களால் இக்கட்சி இன்று புத்துயிர் பெற்றிருக்கிறது.

கட்சியின் மூத்த தலைவர்களாலும், கட்சியின் உயிரோட்டமாக விளங்கும் இளைஞர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களின் ஒருமித்த வாக்குகளின் நம்பிக்கையில் ம.இ.கா கட்சியின் ஒன்பதாவது தேசிய தலைவர் பதவிக்கு டாக்டர் எஸ். சுப்ரமணியம் பதவி ஏற்றுள்ளது பெருமைக்குறிய தகவலாகும்.

இருப்பினும், சமுதாய நலன் கருதாத சில புல்லுறுவிகள் இன்னும் சுயநல பதவி போராட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பதவி போனால் மவுசு போய்விடுமே அச்சத்தில், விட்டு கொடுக்கும் மனபான்மை இல்லாதா குணத்தில் தொண்டர்களை தூண்டி விட்டு போராட்டத்தை கிளப்பிவிடுகின்றனர் சில தரப்பினர். மக்கள் இதனை முதலில் உணருதல் மிக அவசியம். மக்கள் பிரச்சினைகளோ ஏராளம், இன்னும் எத்தனை காலம் இப்படி கட்சியை எதிர்ப்பு என்ற போராட்டங்களை தொடர்வார்கள் இக்கூட்டத்தினர்.

ம.இ.கா கட்சிக்கு, சில காலங்களாக பிடித்த நோயை கண்டிபாக மருத்துவராகிய சுப்ரமணியம் சிகிச்சை செய்ய வேண்டும்.இல்லையேல் இந்திய மக்களின் நிம்மதியையும் நம்பிக்கையையும் இவர்கள் சீரழித்துவிடுவார்கள்.

 • டாக்டர் சுப்ரமணியம் ஒரு நல்ல தலைமைத்துவம் கொண்ட நபர்,
 • பல காலம் கட்சிக்கு தொண்டாற்றியவர்,
 • அரசியல் அனுபவம் கொண்டவர்,
 • துணை அமைச்சராக இருந்த காலம் முதல் அமைச்சராக பதவி வகித்த வரையில் தொழில் அடிப்படையில் நல்ல பெயர்பதித்துள்ளார்,
 • அதோடு தான் வென்ற சிகாமாட் வட்டாரத்திலும் சிறந்த அரசியல் சேவையாளராக மக்களால் கூறப்படுகின்றார்,
 • தேசிய ரீதியில் அணைத்து இனத்தாரடுனும் சுமூகமாக செயலாற்ற கூடிய தலைவர்,
 • மலாய், ஆங்கிலம், தமிழ் போன்ற முக்கிய மொழிகளில் சரளமாக மக்களை பிரதிநித்து உரையாற்றக்கூடிய பேச்சாளர்,
 • தூரநோக்கு, புத்தாக்க சிந்தனை மிகு இளையோர் ஆதரவு பெற்ற தலைவர்.

எனவே, இதுபொன்ற சிறந்த தலைமைத்துவம் கொண்ட இவர் கண்டிப்பாக மலேசிய இந்திய மக்களின் நம்பிக்கையை பாழாக்க மாட்டார். இவரும் செயலாற்ற இன்றைய ம.இ.கா முழு ஆதரவு வழங்கி தேசிய தலைவராக உருவாக்கிவுள்ளது. ம.இ.கா கட்சியின் நம்பிக்கையாய் திகழ்கிறார் டாக்டர் எஸ் சுப்ரமணியம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையில்லையேல் கண்டிபாக அழிவு என்பதை உணர்வோம். சமுதாயம் வளம் பெற ஒருங்கிணைவோம்.

சிறப்பு அரசியல் கண்ணோட்ட கருத்து ,

டாக்டர் சுரேஸ்

Spread the News :-
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •