தமிழ்ப்பள்ளிகள் குண்டர் கும்பலை வளர்க்கிறதா?

0
991

 முன்னால் மேலவை உறுப்பினர் (DAP) எஸ்.ராமகிருஷ்ணனின் கூற்று கண்டிக்கத்தக்கது. நாட்டில் குண்டர் கும்பல் வளர்வதற்கும் அதிலே ஈடுப்பட்டவர்கள் எளிதில் ஆள் சேர்ப்பதற்கும் தமிழ்ப்பள்ளிகள் பெரும் பங்காற்றுகிறது என்று முன்னாள் (DAP) மேளவை உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாக வெளியான தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ஆர்.கே.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

  தமிழ்ப்பள்ளிகளில் கற்று தேர்ந்தவர்கள் பலர் இன்று பல்வேறு துறைகளில் சிறந்தக் குடிமக்களாக திகழ்ந்து வருகின்றனர். நிபுணர்களாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியியலாளர்களாகவும் கற்றுத் தேர்ந்து சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

  இவரது இக்கூற்று தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்க்கல்விக்கும் மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை முழுமையாக தமிழ்மொழியில் கற்பதால் இடைநிலைப்பள்ளியில் அவர்கள் கல்வியில் சிறக்க முடியவில்லை என்று புதுக்கதை விடுகிறார். ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், தலைவர்கள், அரசாங்கம் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் வேளையில் எஸ்.ராமகிருஷ்ணின் கூற்று வேடிக்கையாக உள்ளது. குண்டர் கும்பலின் பிரச்சனைக்கு இவருக்கு தமிழ்ப்பள்ளிதான் கிடைத்ததா?

  மேலவை உறுப்பினராக இருந்தக் காலத்தில் இவர் எத்தனை முறை இப்பிரச்சனையைத் தொட்டு பேசியிருக்கிறார்.தற்போது தமிழ்ப்பள்ளி ஆசிரியரையும், தலைமையாசிரியர்களையும் குற்றம் சாட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆசிரியர்களின் தியாகம் இவருக்குத் தெரியுமா? புரியுமா? இவர் மேளவை உறுப்பினராக இருந்த காலத்தில் வருகை தந்த தமிழ்ப்பள்ளிகள் எத்தனை? தமிழ் இனத்தின் அடையாளம். இனத்தை அழிக்க வேண்டும் என்றால் மொழியை அழித்தால் போதும். தமிழ்ப்பள்ளிகளை மூடும் அளவிற்கு கருத்து தெரிவித்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனை சமுதாயம் கண்டிக்க வேண்டும் என்று மலேசிய முத்தமிழ் சங்கத்தின் தலைவரும், மலேசிய இந்திய பட்டதாரிகளின் சங்க ஒருங்கிணைப்பாளரும், முன்னால் தமிழ்ப்பள்ளி மாணவருமான ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.

ஆர்.கே.ரமணி கிருஷ்ணன்-MyTimes

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •