சுகாதார நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்

0
196

பெட்டாலிங் ஜெயா, 3 ஜூலை- மலேசிய சுகாதார பரராமரிப்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்வதில்  மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர். சுகாதார பராமரிப்பு சுற்றுலா துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்களின் சேவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அஷோக் பிலிப்ஸ் தெரிவித்தார்.

 ‘நாட்டிலுள்ள  தனியார் சுகாதார நி     றுவனங்களை, அனைத்துலக ஒருங்கிணைந்த ஆணையத்துடன் இணைந்து, மலேசிய சுகாதார தர மேம்பாட்டுச் சங்கம் மதிப்பீடு செய்து வருகிறது. அதனால் தான், வெளிநாட்டு நோயாளிகள் நியாயமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், சுகாதார சுற்றுலாவுக்கு மலேசியா முன்னுரிமை வழங்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 770,000 சுகாதார சுற்றுப்பயணிகள் மட்டும் வருகையளித்தனர். இவர்களால், நாட்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்தது, குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here