கல்வி அமைச்சு நடத்தும் 2016-ம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கான இலவச உயர்க்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு

0
1346

எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு முடிவுகளைப் பெற்ற இந்திய மாணவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை நிர்ணயிப்பதற்கு உதவும் பொருட்டு கல்வி அமைச்சு இலவச உயர்க்கல்வி வழிகாட்டி கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வுயர்க்கல்வி கருத்தரங்கின் விவரங்கள் கீழ்கண்டவாறு:

திகதி : 4 மார்ச் 2017 (சனிக்கிழமை)
நேரம் : காலை மணி 9.00
இடம் : நேதாஜி மண்டபம், ம.இ.கா தலைமையகம்,
மெனாரா மாணிக்கவாசகம், 1, ஜாலான் ரஹ்மாட்,
50350 கோலாலம்பூர்.

எஸ்.டி.பி.எம் முடித்த இந்திய மாணவர்களை இக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கின்றோம். இக்கல்விக்கருத்தரங்கிற்கு வரவிரும்பும் இந்திய மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை உடன் எடுத்துவருமாறு கேட்டுக் கொள்கிறோம். இக்கருத்தரங்கு பற்றிய மேல் விவரங்களுக்கு 014-9297899 அல்லது 017-5650917 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.-MyTimes

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •