புத்ராஜெயா (Mytimes)– வருகின்ற செப்டம்பர் 23 -ஆம் திகதி, புதன்கிழமை, மாலை மணி 6 அளவில் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஷா அலாமில் அமைந்துள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளிக்கு துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதனோடு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவிருக்கிறார். எனவே சுற்று வட்டார பொது மக்கள், இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமென, அன்போடு கல்வி அமைச்சு அழைக்கின்றது.

ம.இ.கா-வின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், தானே சென்று மக்களை நேரடியாக சந்திக்கும் பழக்கத்தை செயல்ப்படுத்தி வருகிறார் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சென்று, தானே கண்காணிப்பது இவரின் சிறப்பு அம்சமாக அமைகிறது.

ம.இ.கா-வின் மேல் முறையீட்டின் வழி,  பிரதமர்  கல்வி அமைச்சின் மூலம் கடந்த ஆண்டு சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி, இணைக் கட்டட நிர்மாணிப்புக்கு கணிசமான நிதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்க தகவலாகும்.

ம.இ.கா தேசிய தலைவரின் வருகை இத்தமிழ்ப்பள்ளிக்கு மேலும் பல நன்மைகளைக் கொண்டுவரும் என கருதபடுகின்றது. தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு தேசிய தலைவரோடு தோல்கொடுக்க பொதுமக்கள் கலந்து சிறப்பிபர் என்று பெரிது எதிர்பார்கப்படுகின்றது. (Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here