சிறார் கொடுமையை கண்டால் உடனடியாக தகவல் கொடுங்கள்- பிரதமர் வலியுறுத்துகிறார்

0
827

புத்ராஜெயா :  சிறார் கொடுமை நடப்பதை அறிந்தால் உடனடியாக 15999 நூர் தொலைப்பேசிக்கு தகவல் மையத்திற்கு அழைத்து தகவல் கொடுக்குமாறு பிரதமர் நஜிப் துன் ரசாக் பொதுமக்களிடம் முகபுத்தகத்தின் வழி கேட்டுகொண்டுள்ளார்.

சிறார் கொடுமை மிக பயங்கரமான செயல், மலேசிய மக்கள் இச்செயல் ஏற்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்மையில் சிறார் கொடுமைக்கு ஆளாகிய 5 வயது சிறுமி நூர் சுலியனா நிலையை கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக , அச்சிறுமி மீண்டும் உடல் ஆரோக்கியத்தோடு பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஆண்டவனை பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அச்சிறுமிக்கு 13 இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது ராஜா சாய்னாப் பெண்கள் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு இடுப்பு,கை,முதுகு போன்ற இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டத்தோ டாக்டர் கசாலி ஹாச்னி முஹமட் ஹாசான் தெரிவித்தார்.

இது போன்ற நிலை மீண்டும் சிறார்களுக்கு ஏற்படாமல் இருக்க மலேசிய மக்கள் உறுதுணையாக சிறார் கொடுமை தடுப்பு அமைப்போடு செயல்ப்பட வேண்டும். 15999 நூர் தொலைப்பேசிக்கு தகவல் மையத்திற்கு உடனடியாக தொடர்புக்கொண்டு சிறார் கொடுமையை தடுக்க வேண்டும் என்று தன்னுடைய முகபுத்தகத்தின் வலியுறுத்தியுள்ளார் நஜிப் துன் ரசாக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here