புத்ராஜெயா (Mytimes) –  உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் கமலநாதன் சிகப்பு சட்டைப் பேரணிக்கு பணம் கொடுத்து உதவினார் என்று  இணையம் மற்றும் கைத்தொலைப்பேசியின் வழி பரபரப்பாக மக்களிடையே தகவல் பாய்ச்சப் பட்டு வருகிறது. ம.இ.கா தேசிய தலைவர் டாக்டர் சுப்ரமணியம்,  இம்மாதிரியான மக்கள் நிம்மதியை பாதிப்படையச்செய்யும் பேரணிகளுக்கு ம.இ.கா வும் அதன் குழுமத்தினறும் என்றும்  துணைப்போக மாட்டார்கள் என்று திட்டவட்ட அறிக்கை விடுத்திருந்தார்.ஆனால் திடீர் என்று , உலுசிலாங்கூரில் மக்கள் இப்பேரணியில் கலந்துக் கொள்ள, சிகப்பு வண்ண சட்டைகளை வாங்க பணம் கொடுத்து உதவி , பேரணிக்கு முழு ஆதரவு வழங்கினார் என்று தகவல் கையிறு திரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மக்களிடையே விஷமமாக பரவச்செய்து வருகின்றனர் சில தரப்பினர். தகவலைப் பெற்ற கமலநாதன் உடனடி அவசர அறிக்கையை அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளார். உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் , வாக்களிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வது எனது கடமை. அதைதான் நான் செய்தேன். சிகப்பு சட்டைக்கோ , சிகப்பு பேரணிக்கோ கண்டிபாக அல்ல.

என் அலுவலகத்திற்கு வழக்கமாக , உலுசிலாங்கூரிலிருந்து கோரிக்கை கடிதங்களும், பணவுதவி விண்ணப்பங்களும் வந்த வண்ணமாக இருப்பது புதிதல்ல, அந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமையாகும். அதே போன்று உலுசிலாங்கூரிலிருந்து குறிப்பிட்ட ஒரு அமைப்பு அவர்களது மாதாந்திர கூட்டத்திற்கும், தொண்டூழிய நடவடிக்கைகளுக்குப் பணவுதவி விண்ணப்பம் கொடுத்துள்ளனர். மக்கள் நலனுக்காக, தன்னார்வளர் சேவைப் பணிக்காக இவர்கள் விடுத்த கோரிக்கைகளுகாகதான் நான் இவர்களுக்கு பணவுதவி வழங்கினேன். இந்த பணம் சிகப்பு சட்டை பேரணிக்காக வழங்கப்பட்டதல்ல.

நல்ல எண்ணத்தில் பொது சேவைக்காக வழங்கப்பட்ட பணம் , சிகப்பு பேரணிக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது வருதமளிக்கிறது. அதோடு இது ஒரு கண்டிக்கதக்க செயலாகும், இனி இதுப்போன்ற பிரச்சினைகளும் தவறுகளும் ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக செயல்ப்பட வேண்டிருக்கிறது, அதற்கு நான் உறுதியளிக்கிறேன். மக்களிடம் இருந்தும் , பொது இயக்கங்களிலிருந்தும் வரும் விண்ணப்பங்களை முழுமையாக ஆகூடுதலாக ஆராய்ந்த பிறகே, பணவுதவி வழங்கப்படும் அதற்கு எனது அதிகாரிகள்  செயல்படுத்தபடுவர்.

ம.இ.கா தேசியக் கட்சியின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவன், அரசுக்கு எதிராக என்றும் செயல்பட மாட்டேன். மக்களுக்கு நலன் தரா எந்தவொறு பேரணிக்கும் துணைப்போக மாட்டேன். மக்களுக்கு துணைக்கல்வி அமைச்சராகவும், வாக்களித்த மக்களுக்கு நல்லதொரு தலைவனாகவும், கட்சிக்கு சிறந்த தொண்டனாக செயலாற்றுவதுதான் என் கடமை. என்னை கவிழ்ப்பதற்கு ஒரு சிலர் இதுப்போன்ற  வதந்திகளையும், முறையற்ற செய்திகளையும் கயிறு திரித்து எழுதி செயல்பட்டுவருகின்றனர். பொது மக்கள் இவைகளை நம்பி ஏமார்ந்து விடாதீர்கள். தீர விசாரித்து தகவலை பெறுங்கள். தான் கண்டிபாக சிகப்பு பேரணிக்கு ஆதரவு வழங்கவில்லை என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் கமலநாதன் தெளிவுப்படுத்தினார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here