சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் முஸ்லிம்களுக்கு விவாகரத்து

0
280

ஷா ஆலம், ஜூலை 7- புரிந்துணர்வு  அடிப்படையில் திருமண வாழ்விலிருந்து பிரிய நினைக்கும் முஸ்லிம் தம்பதியருக்கு ஆறு மணி நேரத்தில் விவாகரத்து வழங்கும் புதிய திட்டத்தை சிலாங்கூர் மாநில ஷாரியா நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னர், விவகாரத்து விண்ணப்பத்தைப் பரிசீலிக்க  இதற்கு முன்னர் 3 மாதம்  தேவைப்பட்டது. தற்போது, இந்த கால அவகாசம் மேலும்  குறைக்கப்பட்டு 6 மணி நேரமாக சுருக்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில ஷரியா நீதிமன்ற நீதிபதி டாக்டர் முகமது நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

ஆயினும், இந்த புதிய 6 மணி நேர விரைவு விவாகரத்து பரிசீலனை  செக்‌ஷன் 47, இஸ்லாமிய குடும்ப சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு மட்டும் சிலாங்கூர் மாநிலத்தில் 22,230 விவகாரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •