சிகாம்புட் தோட்டம் இடிக்கப்பட்டது–குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம்

0
298

சிகாம்புட் ஜுன் 19 – கடந்த வெள்ளிக்கிழமை சிகாம்புட் தோட்டம் பல எதிர்ப்புக்கு மத்தியில் முற்றாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சுமார் 400 பேர் பதாகைகளை ஏந்தி காலை 7 மணி முதல் இடிக்கும் பணிகளை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே, ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்ட திருச்செல்வன்,38 கூறுகையில் தான் அங்கே 4 தலைமுறையாக இருந்து வந்ததாகக் கூறினார்.மேலும், தற்போது வீடு இல்லாததால் நடுத் தெருவில் நிற்பதாகக் கூறினார்.தங்களுக்கு நேர்ந்தது நியாயமற்றது என அவர் தெரிவித்தார்.பெயர் கூற விரும்பாத நீதிமன்ற ஆணையாளர் ஒருவர் அப்பகுதியில் வாழும் மக்களை அவ்வீடத்திலிருந்து வெளியேறக் கூறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றம்  நோட்டிஸ் வழங்கியதைச் சுட்டிக் காட்டினார்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •