சபா காற்பந்தாட்ட வீரர் சாலை விபத்தில் படுகாயம்

0
250

கோத்தாகினபாலு, 7 ஜூலை- காரில் சென்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சபா காற்பந்தாட்டக்காரர்  ரொசைமி அப்துல் ரஹ்மான் படுகாயமடைந்தார்.விபத்தில் படுகாயமடைந்த 23 வயதான, சபா காற்பந்துச் சங்கத்தின் விளையாட்டாளரான ரொசைமியும் அவரது நண்பரும், தற்போது சபா, குயின் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவ்விருவரும் லிக்காஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள ஷான் தாவ் சீனப்பள்ளிக்கு அருகே வந்துக்கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •