தமிழ்ப்பள்ளிகளுக்கு மீண்டும் 25 மில்லியன் ஒதுக்கீடு ; கமலநாதன் அறிவிப்பு

0
460

30 மார்ச் 2018- மை டைம்ஸ் 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மலேசிய பிரதமர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட்டினை வழங்கியுள்ளார் என கல்வித் துணை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். தற்போதுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளுள் 366 அரசாங்க உதவிபெறும் தமிழ்ப்பள்ளிகளும் 158 அரசாங்க தமிழ்ப்பள்ளிகளும் உள்ளன எனவும் இம்மானியத்தின் முதல் கட்டமாக 25 மில்லியன் ரிங்கிட் அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு கடந்த 25 அக்டோபர் 2017-ம் தேதி வழங்கப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.

11 மாநிலங்கள் அதாவது சிலாங்கூர், ஜொகூர், பேரா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிளான், பகாங், கிளாந்தான் மற்றும் கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூரிலுள்ள அனைத்து அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் முதல்கட்ட மானியத்தை பெற்று பயனடைந்தன என்றார்.

2017-ம் ஆண்டின் மானியத்தில் மீதமுள்ள 25 மில்லியன் ரிங்கிட் மானியம் இரண்டாம் கட்டமாக 284 தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிர்வரும் 2-ஆம் தேதி ஏப்ரல் 2018-ம் நாள் வழங்கப்படவிருப்பதாக கூறினார். இந்த 284 பள்ளிக்கூடங்களுள் 251 பள்ளிகள் அரசாங்க உதவிபெறும் தமிழ்ப்பள்ளிகளாகும் ; மீதமுள்ள 33 பள்ளிக்கூடங்கள் அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கூடங்களாகும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மானியத்திலும் 10 தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டு மேம்பாட்டிற்கும் ;50 பள்ளிக்கூடங்களுக்கு 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மானியம் பெறவுள்ள பள்ளிக்கூடங்கள் மானியத்தினை நல்ல வழியில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான வசதியுள்ள சூழ்நிலையை உருவாக்குவார்கள் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக கூறினார் அவர் குறிப்பிட்டார் மேலும் இவ்வேளையில் தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் முன்னேற்றத்திற்காக மானியம் வழங்கிய மலேசிய பிரதமர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கும் , இம்மானியத்தினை பெற்றுத்தர உதவிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா-வின் தேசிய தலைவருமான மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் ச . சுப்ரமணியம் அவர்களுக்கும், கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ மாட்சிர் காலிட் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறிக் கொள்வதாக கல்வித் துணை அமைச்சர் இன்று கல்வி அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.-மை டைம்ஸ்

Spread the News :-
 • 309
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  309
  Shares