பலத்த காற்றில் தொட்டிலோடு பறந்த குழந்தை

0
292

கோத்தாகினபாலு, ஜூலை 6-  பலத்த காற்று வீசியதில் குழந்தை ஒன்று தொட்டிலோடு பறந்தது. நெஞ்சை பதைக்க வைக்கும் இந்த சம்பவம், சபா துவாரானில் நிகழ்ந்தது.வீட்டில், ஒரு பலகைச் சட்டத்தில் தொட்டில் கட்டி, வழக்கமாக இரண்டாவது குழந்தையைத் தூங்க வைத்துள்ளார், 22 வயதான நுர்ஹைஆ நசிப்.

15 நிமிடங்கள் கழித்து நடு ராத்திரியில் பலத்த புயல் காற்று வீசியுள்ளது.உடனடியாக நுர்ஹைபா அந்த பலகை சட்டத்தைப் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள் பலகையோடு பெயர்த்துக்கொண்டு தொட்டிலிலுள்ள குழந்தையையும் வாரிக்கொண்டு போய்விட்டது புயல் காற்று.‘அந்த நேரத்தில் என்னால் என் குழந்தைக்கு உதவவே முடியவில்லை. அந்த நேரத்தில் என் குழந்தையை ஒரேடியாகத் தொலைத்துவிட்டேனோ என்று கூட தோன்றியது” என நுர்ஹைபா தெரிவித்தார்.

இதனையடுத்து, தாமும் தமது கணவர் ஜைனுடின் ஹசான் மற்றும் உறவினர் ஒருவரும் இணைந்து, குழந்தையை எல்லா இடங்களிலும் தேடியதாக அவர் தெரிவித்தார். தமது ஐந்து வயது மகன் முகமது ஜாயினும் குழந்தையைத் தேட முனைந்ததாக அவர் தெரிவித்தார்.ஆனால், அதிர்ஷ்டவசமாக அரை மணி நேரம் கழித்து, அக்குழந்தை வயல்வெளி சேற்றில் விழுந்து கிடந்ததை அண்டை வீட்டுக்காரர்கள் கண்டுபிடித்தனர்.வயலில் சேற்றில் விழுந்த அக்குழந்தை அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாள்.

இதனையடுத்து துவாரான் மருத்துவமனையில் அக்குழந்தை சேர்க்கப்பட்டது. பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தையில் தொடை எலும்பு உடைந்ததுடன், உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.“வலியால் குழந்தை அழுதுகொண்டே இருப்பதாகவும், தம்மால் அவளை தூக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், அவள் உயிரோடு இருப்பதால் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்” நுர்ஹைபா தெரிவித்தார்.

எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்குள் சேதமடைந்த தமது வீட்டை சரிகட்ட முடியாது என்றாலும், தமது குடும்பம் பாதுகாப்பாக இருப்பதே நமக்கு பெரிய விஷயம் என நுர்ஹைபா தெரிவித்தார்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •