பழனிக்கு தோல்வி பயம் – கூட்டம் திரட்டுகிறார் சோதிநாதன் !

0
472

கோலாலம்பூர் 19 ஜூன் – இந்திய மக்களின் தேசிய முன்னனி கட்சி மஇகா கடும் இன்னலை எதிர்நோக்கி வருகிறது. கோலாலம்பூர் உச்ச நீதிமன்ற முடிவுக்குப் பின்னரும் கட்சியில் போராட்டங்கள் அதிகரித்து விட்டன. ம.இ.கா-வில் மறுதேர்தல் நடத்துமாறு உத்தரவிட்ட சங்கங்களின் பதிவிலாகா மீது, டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் பதிவு செய்த வழக்கு தோல்வியை அடைந்தது நாடறிந்த தகவல்.

இதனை தொடர்ந்து கட்சி மீண்டும் வலுப்பெற மற்றுமொரு கட்சியின் மூத்த தலைவர் டத்தோ ஸ்ரீ. S. சுப்பரமணியம்  எடுத்த முயற்சிக்கு முட்டுகட்டயாக அமைகிறார் பழனிவேல். தொடர்ந்து தானே தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்வதில் முக்கியத்துவம் காட்டுகிறார்.

இலுப்பறியாக இருக்கும் இந்த கட்சி பூசல் விரைவில் ஒரு முடிவுக்கு வருவதற்கு தடையாக இருக்கிறார் என்று சமுகநல தலைவர்கள் கருதுரைக்கின்றனர். இதனை தொடர்ந்து , கோலாலம்பூர் உச்ச நீதிமன்ற விடுத்த உத்தரவை மதித்து அதற்கு செவிசாய்த்து , கட்சியின்  அனைத்துப்பிரிவிலான தேர்தல் நடத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் டாக்டர் சுப்பரமணியம். அடுத்த ம.இ.கா-வின் தலைமைத்துவத்தை வழிநடத்துவதற்கு மக்கள் ஆதரவு வழங்கிவிட்டனர், அதோடு தேசிய முன்னனியின் தலைவர்கள் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், டான் ஸ்ரீ முஹிடின் யாசின் போன்றோரும்  இவருக்கு பேராதரவு வழங்குவதாக வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

வருகின்ற  ஞாயிறு  21 ஜூன்  அன்று , நடந்தபிரச்சினைகளை தீர்வுகண்டு, கட்சியின் வருங்காலத்திற்க்கான  நலன்களையும் திட்டங்களையும் வழிநடத்த டாக்டர் சுப்பரமணியம் நாடுதளுவிய  புத்ரா வாணிப அரங்கத்தில் நாடுதளுவிய அளவில் ம.இ.கா அங்கத்தினரை ஒன்று திரட்டி விளக்கவுரை வழங்குவதாக அறிவித்திருந்தார். பாராட்டக்குரிய  முயற்சி ஆனால் இதற்கும் முட்டுகட்டாய பழனிவேல் செயல்ப்படுகிறார்.

இன்று ம.இ.கா தேசிய செயலாளர் என்று கூறிக்கொள்ளும் டத்தோ சோதிநாதன், வருகின்ற சனிக்கிழமை  20 ஜுன்  புத்ரா வாணிப அரங்கத்தில் ம.இ.கா அங்கத்தினரை திரட்டுவதாக பத்திரிக்கை அறிக்கை விடுத்துள்ளார். இது மக்களை திசைத்திருப்புதற்க்கான ஒரு ஏட்டாப் போட்டியான செயல் மற்றும் ம.இ.கா அங்கத்தினர் குழப்புவதற்க்கான சதி திட்டம் என்று அரசியல் சானக்கியர்கள் கருதுகின்றனர்.

மக்கள் ஆதரவு தற்ப்போது டத்தோ சுப்பரமணியம் பக்கம் திரும்பியது டத்தோ பழனிவேலு மற்றும் அவர் கூட்டு குழுமத்திற்கு பயத்தை கொடுத்திருப்பதாகவும் அதன் பீதியில் இவர்கள் இதுபோன்றா அறிக்கை விடும் மற்றும் கூட்டம் திரட்டும் செயலில் தீவிரமாக ஈடுபடுகின்றனர் என சுற்று வட்டார தகவல் தெரியப்படுத்துகிறது. பழனிவேலின் தற்ப்போதையப் பதவி போராட்டத்திற்கு தலைமை தளபதியாய் களமிரங்கிருக்கிறார் சோதிநாதன்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •