மனித தன்மை இழந்து மிருகமாக வன்முறையில் ஈபடுவோருக்கு கடுந்தண்டனைகள் வழங்கப்படுதல் வேண்டும் – டத்தோ தி.மோகன்

0
446

கோலாலம்பூர் (Mytimes)–  மலேசிய திருநாட்டில் நமது சமுதாயம் சிறுபான்மை இனமாக இருக்கின்ற சூழலில் நமக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிவினையை ஏற்படுத்திக்கொள்ளும் வண்ணம் பாராங்கத்திகளை கொண்டு வெட்டிக்கொள்வது, வழிப்பறிகளில் ஈடுபடுவது, என்பன போன்ற பல குற்றச்சாட்டுக்கள் நமது சமுதாயத்தை நோக்கி இருக்கின்றன. மிகவும் மோசமாக, கொடூரமாக அரங்கேறியிருக்கும், சமூக வலைத்தளத்தில் வெளிவந்த, ஒரு மாதுவை பாராங்கத்தியை வைத்துக்கொண்டு வெட்டும் காட்சியானது சமுதாயத்திற்கு கேடு என டத்தோ டி.மோகன் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேயமில்லாமல் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. போர்ட்டிக்சனில் இந்த சம்பவம் நடைபெற்றதும், அதற்கு காரணமானவர்கள் பிடிபட்டிருப்பதும் ஒரு புறம் இருப்பின், இந்த மாதிரியான சம்பவங்கள் சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டு செல்கிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

ஒரு சிலரின் இந்த மாதிரியான போக்குகளால் ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிப்புக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மீது நாம் செலுத்தும் குற்றச்சாட்டுக்கள் கடந்து இந்த மாதிரியான சீர்கேடுகளை சரி செய்து சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும்.

மனிதனுக்கு உரிய தன்மைகளை இழந்து மிருகமாக செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுதல் வேண்டும். மனிதத்தன்மையை இழந்திருக்கும் ஆட்கள் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. சுயசிந்தனை இல்லாது தன் வாழ்வையும், பிறர் வாழ்வையும் அழிக்க நினைப்பதும், சமுதாயம் சார்ந்த இந்த சீர்கேடுகள் துடைத்தொழிக்கப்படுதலும் அவசியம் என  டி.மோகன்  ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். (Mytimes)

 

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •