காஜாங் (Mytimes) -கலை, கலாச்சாரம் போன்றவற்றை இன்னும் இந்த மலேசிய மண்ணில் உயிரோட்டமாய் நிலைக்க, செயலாற்றி வருவதில் நமது கலைப் பள்ளிகளின் பங்கு அளப்பெரியது.இருப்பினும் இந்த கலை உயிரோடு இந்த மண்ணில் வாழுவதற்கு , கலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பாடு போராட்டமாய் அமைகிறது. (Mytimes)- இணையப் பத்திரிக்கை நடத்திய ஒரு சிறப்பு நேர்க்காணலில் , கலைப்பள்ளி உருவாக்கம் பெற்று வேருன்றி நிலைக்க படும் இடர்பாடுகள் தெரிய வந்தது. இந்த சிறப்பு நேர்காணலில் ஆசிரியர் ஸ்ரீமதி நிஷா அவர்கள் (Mytimes)- வோடு மனக்குமுறல்களைப் பதிவு செய்தார்.

நாட்டியாஞ்சலி கலைமன்றம் (Natyanjali Arts Academy) கடந்த 10 வருடங்கலாக காஜாங் நகரில் கலைக் கோயிலாக செயலாற்றி வருகிறது. நாட்டியம்,சங்கீதம்,பாரம்பரிய இசைக்கருவிகள் போன்ற முக்கிய அம்சங்களை பாடப் போதனைகளாக தரப்படுகின்றது. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கலைமன்றத்தின் மூலம் கலைச்சித்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.இது ஒரு பாராட்டதக்ககுடிய செயலாகும். 10 வருடங்களாக இந்த கலைப்பணியை முழுநேர தொழிலாக தானியிங்கியாக செயாலாற்றி வருகிறார் ஆசிரியர் ஸ்ரீமதி நிஷா அவர்கள். திருமணத்திற்கு பிறகு காஜாங் நகருக்கு கணவரோடு புலம்பெயர்ந்த வந்த இவர் கற்ற கலையை இன்னும் வாழவித்து கொண்டிருக்கிறார். 6 வயது முதல் பரதகலையில்  இணைந்து, 19 -வயதில் ஆரேங்கேற்றம் முடித்து, Kalasethra Foundation Chennai -யில் தனது கலைப் படிப்பை தொடங்கினார்.

கலாஷேத்திரா பாணியில் இவர் பரதநாட்டியத்தில் டிப்ளோமா (Diploma in Bharatanatyam) பட்டம் பெற்றுக்கிறார். அதோடு தற்போது பரதநாட்டியத்துறையில் கலைக் காவேரி திருச்சி பல்கலைக்கழத்தில்  முதுகலைப்பட்டம் (PHD) பயில தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் ஸ்ரீமதி நிஷா. பரத என்பது வெரும் ஒரு நாட்டியம் மட்டுமன்று, அது முதாதையர் விட்டு சென்ற பொக்கிஷமாகும். பரதத்துறையில் முதுகலை முடித்து சாதனைப் புரிந்து விட வேண்டும் என்பது இவரின் அவா.

கனடா,ஆஸ்த்திரேலியா,சிங்கப்பூர், போன்ற நாடுகளிலும் இவர் பரதநடனம் புரிந்திருக்கிறார். தூரநோக்கு சிந்தனைக்கொண்டு, கலைத்துறையின் வளர்ச்சிக்குப் பாடுப்படும் இவரின் முயற்சியின் அடையாளமே ” நாட்டியாஞ்சலி கலைமன்றம் ” . இதன் உருவாக்கத்திற்குப் பல தடைகளையும் இன்னல்களை இவர் தாண்டி வந்திருக்கிறார். இன்றும் இந்த கலைமன்றத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயிலுகிறார்கள்.நாட்டியம்,சங்கீதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள மாதம் 60 ரிங்கிட் மட்டும் கட்டணமாக பெறப்படுகிறது. மாணவர்களிடமிருந்து பெறப்படும் தொகையை வைத்தே இந்த காஜாங் வட்டாரத்தில் இக்கலைமன்றம் செயல்ப்பட்டுவருகிறது. வருமானம் குறைவாக இருந்தாலும் ஆசிரியர் தனது கலைத்துறைக்கான சேவைப்பணியை மறந்ததில்லை.பரதக்கலை கற்க ஆவல் கொண்ட , ஏழை குடும்பத்தை சார்ந்த  மாணவர்களுக்கு இவர் இலவசாமாகவும் பரதக்கலையை கற்றுகொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.

அன்மையில் நாட்டியாஞ்சலி கலைமன்றத்திலிருந்து ஸ்ரீமதி நிஷா அவர்கள் தன் முயற்சியால் செதுக்கிய நான்கு நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவிகளை சென்னை சிவா கலாலாய கலாஷேத்திரா  பாலசுப்ரமணிய மண்டபத்தில் அரங்கேற்றம் செய்தார். இது இவரின் சுய முயற்சியே. இம்மாணவிகளின் அரேங்கேற்றம் சென்னை இந்தியாவில் நடத்த பண உதவிகள் வழங்க யாவரும் முன் வரவில்லை, ஆனால் அதனை விரைய செலவு என்று கூறி, அம்மாணவிகளின் கனவுகளைக் களைக்க கூறியவர்கள்தான் அதிகம். நமது பாரம்பரிய நடனத்தை கற்க, ஏழ்மை குடும்பத்தை சார்ந்த நம் மாணவர்களுக்கு மனம் இருந்தாலும் பணம் இல்லாமையும் இயலாமையும்தன் பெரும் தடையாக இருக்கிறது. மாணவிகளின் குடும்பமும், நாட்டியாஞ்சலி கலைமன்றமும் முழு செலவையும் ஏற்றுக்கொண்டு இவர்களின் அரங்கேற்றத்தை சிறப்பாக முடித்தது. இன்று இம்மாணவர்கள் பல மாணவர்களுக்கு முன்னுதாரனமாக  இந்த பரதக்கலையை சேவையாக இம்மன்றத்தில் கற்றுக்கொடுக்கின்றனர்.

எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிக்கும், இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பெரிய நிகழ்ச்சிகளுக்கும் நாட்டியாஞ்சலி கலைமன்றம் இலவசமாக பரதநாட்டியம் சங்கீதம் போன்றவற்றை வழிநடத்திகொடுத்திருக்கின்றனர். 1997 ஆம் ஆண்டு மலேசியாவிலேயே முதல் மண் சட்டி நடனம் கொண்டு வந்த  புகழும் இவரை சாரும். இந்த நடனம் இக்கலைமன்றத்தின் சிறப்பு பாடமாகும்.இதற்கு ஜொகூர் மலேசிய இந்து சங்கம் , ரக்கான் முடா அங்கிகார சான்றிதழ்லும் வழங்கி உள்ளனர்.

இத்தனை முயற்சியும் சாதனையும் புரிந்து வரும் எங்களுக்கு பக்கபலமாக ஆதரவுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்த கலைமன்றத்தை விரிவடையச் செய்யவும் இன்னும் பல அரங்கேற்றங்களையும் செய்ய பணவுதவிகளும் நல்ல வழிக்காட்டுதலும் தேவைப்படுகிறது. எத்தனை சங்கங்களிடமோ , சம்பந்தப்பட்ட அரசு,அரசியல் அதிகாரிகளோடும் எங்களின் தேவைகளைக் கோரிவிட்டோம், ஆனால் வழக்கம் போல் வருபவர் நிகழ்ச்சி புகழ்ந்து விட்டு காணமல் போய்விடுகிறார்கள்.

ஒரு சில தனியார் நிறுவனங்கள் எங்களின் முயறசியைக் கண்டு பணவுதவியயையும் செய்ய முன் வந்துள்ளது. சிரியதாக வளர்ந்து வரும் எங்களைப் போன்ற கலைமன்றங்களை ஊடகங்களும், உயர் அதிகாரிகளும், பணம் கொண்ட நல்ல உள்ளங்களும் திரும்பி பார்பது அரிது, மிக குறைவு. வருபோர் எல்லாம் இலவசமாக தங்கள் நிகழ்ச்சிகளுக்கு  பரதநடனம்  ஆடிகொடுக்கும் படியாகதான் கேட்கிறார்கள் ,ஒரு சான்றிதழ்கள் கூட கொடுப்பத்தில்லை. பரத கலைமன்றங்களின் போராட்டம் இவர்களுக்கு தெரிவதில்லை. நாட்டியாஞ்சலி கலைமன்றம் மேலும் பல சாதனைகளை புரிய அனைவரிடத்திலும் இருந்து ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த புனித பரதக்கலையும் சங்கீதமும் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக அமைய வேண்டும்.அதற்கு பணம் ஒரு இடர்பாடாக அமையாமல் இருக்க வேண்டும். மலேசியாவில் சிறந்த ஒரு பரதநாட்டிய கலைமன்றமாக எங்களின் முயற்சி உருப்பெற பொதுமக்களின் பேராதரவு தேவைப்படுகிறது. நமது கலைக்கலாச்சாரம், நமது கடமை என்று வலியுறுத்தி கூறினார் ஸ்ரீமதி நிஷா அவர்கள். இவரின் கலைப்பயணம் தொடர்ந்து வெற்றிப்பெற (Mytimes) வாழ்த்துகிறது. இவருக்கு வழிகாட்டி , ஆதரவு வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் காஜாங் நகரில் சுங்கை ஜெலொக்வில் அமைந்துள்ள இவர்களின் நாட்டியாஞ்சலி கலைமன்றத்தை நாடலாம்.(Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •