ஜோகூர் பாரு (Mytimes) – மலேசிய இந்தியர் இளைஞர் கழகம் (MIYC)  தேசிய ரீதியில் ஏற்பாடு செய்திருந்த, டத்தோ சரவணன் சுழற்க்கிண்ண சொற்போரில் அதிகமான இளையோர்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். இது ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து வருகின்றனர் இக்கழகத்தினர். இதற்கு முழுஆதரவாகவும் தூண்டுகோலாகவும் இருந்து வெற்றிகரமான இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன்.

பொது பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் இதர மேற்கல்வி பயிலும் மாணவர்கள் மிக அதிகமாக இச்சொற்போரில் கலந்து சிறப்பித்தனர். அக்னி சிறகுகள் என்ற (MMU) பல்கலைக்கழக மாணவர்கள் இச்சொற்போரில் டத்தோ சரவணனின் சுழற்க்கிண்ணத்தை தட்டி சென்றனர்.அக்னி சிறகுகள் குழுவினர் கடந்த வருடமும் முதலாம் நிலையை வென்றார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும். இவ்வருடமும் இவர்கள் தங்களின் வாதத்திறமையால் சுழற்கிண்ணத்தைத் தக்க வைத்து கொண்டனர்.இரண்டாம் நிலையாக அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் (USM)  மற்றும் மூன்றாம் வெற்றியாளராக தமிழ் கதிர் எனும் ஆசிரியர் பயிற்சி கழக மாணவர்கள் (IPG) வெற்றி வாகை சூடினர்.

அற்புதமான வாதத் திறமைகளை இச்சோற்போரில் இந்திய இளையோர்களிடையே காணமுடிந்தது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் இளையோர்களிடையே அதிக நாட்டமும் பற்றும் உள்ளது. எனவே இளையோர்களிடையே தமிழ் மொழி பற்று எனும் விதையை விதைக்க வேண்டும். தமிழும் தமிழர்களும் சீரும் சிறப்புமாய் செழித்திட அது வழி வகுத்திடும் என்று சொற்போரைத் தலைமை தாங்கிய தமிழ் பற்றாளருமாகிய துணையமைச்சர் டத்தோ சரவணன் வலியுறுத்தினார். இன்னும் இது போன்ற இளையோர் பயன்பெரும் பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும், மலேசிய இந்தியர் இளைஞர் கழகத்திற்கு பாரட்டுகளும் நன்றிகளும் உரிதாகும் என்று கலந்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கருத்துரைத்தனர்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here