கோலாலம்பூர் (Mytimes) – உதவித்தலைவர் போட்டிக்கு தான் போட்டியிட போவதாக டத்தோ தி.மோகன் அதிகாரபூர்வமாக கட்சியினருக்கு அறிவித்துள்ளார். போட்டியிடுவதை அறிப்பு செய்வதற்கே, கூட்டம் திரளாக திரண்டிருந்தது, முக்கியமாக ம.இ.கா வின் இளைஞர் படை தி.மோகனை சூழ்ந்து கரகோசமிட்டு பேராதரவு வழங்கினர். உதவித்தலைவர் பதவியை இவர் கண்டிப்பாக வெல்வார் என்று வந்திருந்த பலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முன்னால் ம.இ.கா வின் இளைஞர் அணியின் தளபதி இவர் என்பது குறிப்பிடதக்கது. சில அரசியல் சூழலால் இவர் இந்த பதவியை இழந்தார்.இருப்பினும் பதவி போன பிறகும் மோகன், மக்கள் சேவைப் பணியை நிறுத்தவில்லை. அவர் இளைஞர் அணியின் தலைவராக இருந்த காலக்கட்டத்திலேயே பல இளைஞர்களை சிறந்த தலைமைத்துவம் கொண்டு பட்டைத்தீட்டீ உள்ளார். அதற்கு சான்று இன்று நாம் காணக்கூடிய இளைஞர் அணியினரே ஆவர். இன்றைய இளைஞர் படையின் அடிதள உருவாக்கதிற்கு காரணமானவர் மோகன்தான். ம.இ.கா வின் இளைஞர் அணியினர் ஒருவரின் வெற்றிக்கு பின்னாலும் இவர் சுடர் விளக்காய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. பதவி என்பது நிலையில்லா ஒன்று, ஆனால் நல்ல குணமானது நிரந்தமானது, அதற்கு முன்னுதாரணமாய் திகழ்கிறார் இவர்.

மலேசிய இந்தியர் காற்பந்து அமைப்பை (MIFA) உருவக்கிய புகழு இவரையே சாரும். இளைஞர் அணியிலிருந்து விடுபட்ட பிறகு இளைஞர்களை பட்டைத்தீட்ட களமிறஙகினார் மோகன்.இந்திய இளையோர்களுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது அதனை வெளிக்காட்டுவதற்குதான் அவர்களுக்கு வழி தெரியவில்லை.எனவே அவர்களை வழிகாட்டி சிற்ந்தவர்களாக உருப்பெற செய்து வருகிறார் இவர்.தேசிய ரீதியில் அனைத்து இனத்தாரின் பார்வையை இழுத்துள்ளது (MIFA) அமைப்பு. தலைவன் என்பவன் தொண்டர்களை பெருக்கிகொண்டே இருப்பவன் அல்லன், தலைவன் என்பவன் தலைவர்களை உருவாக்குவபன் என்பதே சரி. நாளைய சமுதாயத்தின் வழிக்காட்டியும், தலைவர்களும் இளைஞர்களே என்பதுதான் உண்மை. அவர்கள்தான் அத்துணைக்கும் அடிதளம், எனவே அவர்களை நாடி சென்று நல்லது செய்தவர் இந்த தி.மோகன்.

பதவி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இவரின் அலுவலகத்திற்கும் இல்லத்திற்கும் உதவிகோரி வரும் மக்களின் கூட்டம் குறைந்தது இல்லை.இன்றும் இவரின் மக்கள் சேவைப்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, பல உதவிகளை செய்துகொண்டுதான் வருகிறார். அரசியல்வாதி என்பதற்கும் முன் இவர் ஒரு நல்ல தொழில் அதிபர் மற்றும் நல்ல ஒரு குடும்பவாதி என்று சொல்லலாம். தன்னைத்தானே பக்குவபடுத்தி , முயற்சித்து இன்று ஒரு சிறந்த தொழில் அதிபராகவும் திகழ்கிறார்.மற்றவரை நம்பி வாழ்பவர் அல்ல இவர், மற்றவரை வாழ்விப்பவர் தான் இவர். கூறப்பட்டது அனைத்து வெறும் தி.மோகனைப் பற்றிய புகழாரம் அல்ல, இவைகள் யாவும் உண்மை சான்றுகளாகும். மக்களுக்கும் தெரியட்டும் இந்த தலைவரை பற்றி என்பதுதான் நோக்கம்

ம.இ.கா வின் நிலைமை மொசமைடைந்து, நீதிமன்ற  வாசல்வரை சென்ற பொழுது துணையாக இருந்து மீண்டும் கட்சியை தேசிய தலைவரோடு நிலைநிறுத்த பாடுபட்டவர்களிர் ஒருவர் இவராவார். இன்று ம.இ.கா வின் சுபிட்சமான நிலைமைக்கு இவரின் போராட்டமும் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

முன்னால் இளைஞர் அணி தலைவர் , ம.இ.கா வின் தேசிய உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். மக்கள் சேவை பணியை மெலும் இவர் தொடர்ந்து செய்வதற்கு இது ஒரு படிகல்லாய் அமையும் என்று கருதப்படுவதாக வந்திருந்தவர்கள் கூறினர். எனவே சுற்றுவட்டார ஆருடங்களின் படி தி.மோகன் உதவி தலைவர் பதவியை எந்தவொரு தடங்களுமின்றி வெல்வார் என்று தெரியவருகிறது.(Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •