ஈப்போ (Mytimes) – ம.இ.கா வின் துணைத்தலைவர் பதவிக்கு தான் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அக்டோபர் 15 , ஈப்போ கிந்தா ரிவர் பிராந் ஹோட்டல் மண்டபத்தில் ம.இ.கா உறுப்பினர் மற்றும் ஊடகத்தினர்  முன்னிலையில் அவர் தெரிவித்தார்.

துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்ற பலரின் யூகிப்பிற்கு விடையளித்துள்ளார் தேவமணி. நாடுதளுவிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நடந்துக்கொண்டிருக்கும் ம.இ.கா பேராளர் மாநாட்டிற்கு சென்று மக்களின் ஆதரவை அறிந்தப் பிறகே களத்தில் இறங்கி உள்ளார். தொகுதி தலைவராக இருந்து பின்னர் உதவி தலைவராக பணியாற்றி , இன்று தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் இவர். ம.இ.கா வின் சமூக நல அறவாரியத்தின் பொருளாளராகவும் பிறகு அதன் நிர்வாக தலைவராகவும் செயலாற்றி பல சமூக சேவைகளை வழிநடத்தியுள்ளார் டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி என்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து, பொதுதேர்தலில் ம.இ.காவின் பிரதிநிதியாக கேமரன்மலை நாடளுமன்றத்தை மக்களின் பேராதரவோடு வென்று தேசிய முன்னனி கட்சியின் வெற்றிகொடியைப் பதித்தார். வெற்றிக்குப் பிறகு பிரதமர் துறை துணையமைச்சராக பதவியேற்று செயலாற்றியிருக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டமிடு அமைப்பை பிரதமர்துறையின் கீழ் தலைமைதாங்கி 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை சீராக வழிநடத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல திட்டங்களை வகுத்து தேசிய ரீதியிலும் , உலகளாவிய ரீதியிலும் பிரதமர் துறையைப் பிரதிநிதித்து செயலாளற்றிருக்கிறார்.

அதோடு மலேசியாவின் 10 ஆவது பொருளாதார திட்டத்தையும் வழிநடத்தியிருகிறார் தேவமணி. அமான சாஹாம் முதலிட்டின் அவசியத்தை இந்திய மக்களுக்கு அறிவித்து, அதனை இந்திய மக்கள் வாங்க தேசிய ரீதியில் பிராசாரம் செய்து , இன்று பலர் நன்மை அடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுதொழில் கடனுதவியான தெக்குனை இந்தியர்கள் பெறவும் இவர் பிரதமர் துறையின் மூலம் பேச்சுவார்தை நடத்தி பெருந்தொகைகளை பெற்றுத்தந்திருக்கிறார்.

1983 லிருந்து 2004 வரை  ஸ்ரீ முருகன் நிலையத்தின் மூலம் இந்திய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார் மற்றும் அந்நிலையம் உருவாகுவதற்கு இவர் பெருபங்காற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அடிப்படையில் ஒரு ஆசிரியராக பணியாற்றி பின் ஸ்ரீ முருகன் நிலையத்தின் மூலம் பல இந்திய பட்டதாரிகளை உருவாக்க தோள் கொடுத்திருக்கிறார் தேவமணி.

இன்றும் பொது மக்கள் இவரை டத்தோ என்று சொல்லி அழைப்பதை விட ஆசிரியர் தேவமணி என்றுதான் அழைக்கிறார்கள். ம.இ.கா வழி இவர் வெற்றிப் படிகள் எனும் கல்வி வழிக்காட்டி கருதரங்கத்தை உருவாக்கி நாடுதளுவிய அளவில் வருடா வருடம் நடத்தி வருவதும் மக்கள் அறிந்த ஒன்றே.  1975 முதலே இவர் கல்வி சேவைப்பணியில் ஈடுபட்டு இன்றுவரை அயராது செயலாற்றி வருகிறார்.தேசிய ரீதியில் சிறந்த கல்வி வழிகாட்டியாகவும் சிறந்த தன்முனைப்பு பேச்சாளராகவும் திகழ்ந்தவர் தேவமணி. பேராக் மாநில சட்டமன்றதின் சபாநாயகராகவும் பொருப்பேற்று செயலாற்றி வருகிறார் இவர்.

கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற இரு முக்கிய துறைகளிலும் பேரனுபவம் கொண்டிருக்கிறார். அதோடு,  பிரதமரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் தேவமணி. ம.இ.கா வின் புதிய உருமாற்று செயல் திட்டத்திற்கும், தேசிய தலைவரின் புத்தாக்க சிந்தனை ஓட்டத்திற்கும் தோள்கொடுத்து செயலாற்றி வருவதாகவும் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

துணைத்தலைவர் பதவி என்பது மேலும் அவரின் மக்கள் சேவைப்பணிக்கு படிக்கல்லாய் அமையும், அதன் மூலம் மலேசிய இந்திய மக்களின் வளர்ச்சிக்கு செயல்பட முடியும். எனவே. ம.இ.கா வின் தேசிய துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று உறுதியாக அறிவிதுள்ளார் டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here