மாணவர்களை தமிழ்ப்பள்ளிகளில் போடுவது பெற்றவர்களின் கடமை

0
1115

இனத்தின் அடையாளம்தான் மொழி. அந்த மொழி வளர்வதற்கு தமிழ்ப்ப்ள்ளிக்கூடங்கள் உயிரோடு இருக்க வேண்டும். அந்த தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் வாழ்வதற்கு தமிழர்கள் தமிழ்பற்றோடு மட்டும் இருந்தால் போதாது, மொழியைக் காக்க வேண்டுமென்ற வெறியும் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்ப்பள்ளிகளையும் இனத்தையும் இந்த நாட்டில் நிலைநாட்ட முடியும். இன்று ஒவ்வொரு தமிழனும் தமிழ் இந்நாட்டில் 200 ஆண்டுகள் வாழ்கின்றது என்பதில் மார்தட்டிக் கொள்வதில் ஒரு பயனுமில்லை. காரணம் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை.

இன்று 200 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் நமது மாணவர்களில் 50% மலாய் பள்ளியிலும் 10 % சீனப்பள்ளியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு இனப்பற்றுள்ள மனிதன் இதை செய்வானா. இவை அனைத்தும் படித்து விட்டு அடுத்த பக்கத்தை திருப்ப வேண்டிய விஷ்யமல்ல.

தாய்மொழி தமிழை மறந்தவனை

தாயின் கருவறையில் மரித்திருக்க வேண்டும்..

ஒவ்வொருவனும் சிந்திக்க வேண்டும். இது தவறின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படாது. மற்ற தாயை நம்பி ஒரு போதவது ஒரு தாய் தன் மகனை விடுவாளா.. அந்த கதைதான் இங்கு. வேற்று மொழியை நம்பி, பிழப்பை நடத்துவதற்காக மற்ற பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். கேட்டால் தமிழ் சோறு போடுமா என்ற கேள்வி. ஒவ்வொரு தமிழனும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய விஷயம், சோறு போடுவதற்காக கற்கப்படுவதல்ல் இந்த தமிழ்மொழி. “உடல் இருந்தால்தான் உயிர் சிறக்கும்…!

தமிழ் இருந்தால்தான் தமிழன்

சிறப்பான்…! என்ற வரிகளை சற்று உணருங்கள்.

மனிதனை பண்படுத்துவதற்காக கற்க வேண்டுமடா இந்த மொழியை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்குங் காணோம்

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்.

என்று பாடிச்சென்ற பாரதி இன்றிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பான் இந்த இந்திய சமுதாயத்தைப் பார்த்து தமிழன் இனத்தில் பிறந்த ஒவ்வொருவனும் இனத்தின் அடையாளம் மொழி என்பதனை மனதில் நிருத்த வேண்டும். பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்பதல்ல வாழ்க்கை. பிறந்த பலனை என்றாவது உணரவேண்டும் இல்லையேல் மனிதான பிறப்பதும் மிருகமாக பிறப்பதும் ஒன்றுதான்.

என்ன செய்யவில்லை இந்த அரசாங்கம்

இந்தியர்களும் அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டி வருகின்றது, ஏனென்றால், மொழிதான் இனத்தின் அடையாளம் அதை வளர்ப்பது பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான், தமிழ்ப்பள்ளிகளுக்காக எத்தனை திட்டங்கள். அதனை வாங்கித் தருவதற்காக கல்வித் துணை

அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார் டத்தோ ப.கமலநாதன். இவர் எத்தனையோ முறை முயற்சி செய்து போராடி பல பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், இவர் பதவியேற்ற நாள் தொடங்கி இருக்கும் 524-;ல் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு சென்று பல உதவிகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றார்.

இருந்தாலும் கூட, அதனை பாராட்ட வருபவர்களை விட எதற்காக வந்தாரோ, என்ன அரசியல் கதையோ, என்று அவரையும் பொய்யாக பல விமர்ச்சனங்களைக் கோர்த்து முக புத்தகங்களையும் நாளிதழ்களையும் அளங்கரிக்க காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு தரப்பு இந்திய சமுதாயம். சரி, இப்படிப்பட்ட தலைவர் கிடைத்திருக்கிறாரே, இதனால் மக்கள் என்ன பயன்பெற்றார்கள் என்பதனை ஆராய்வதை விட்டு, அவர் என்னவெல்லாம் செய்யவில்லைய்யோ, என்னவெல்லாம் தவறவிட்டாரோ அதையெல்லாம் எடுத்து முக புத்தகத்தில் போட்டு அவரை அவமானப்படுத்த முயற்சிக்கும் கோழையான சமுதாயமாக இருக்கின்றோம் என்பதனை மறந்து விடாதீர்கள். ஒரு தமிழன் ஒரு தமிழ்ப்பள்ளியை மேம்படுத்துகிறான் அதனை இன்னொரு தமிழன் வார்த்தையாளும் தகாத எடிட்டிங் செய்யப்பட்ட படங்களாலும் அதனை கேவலப்படுத்தி மற்ற இனத்துக்கு படம் போட்டு காட்டுகின்றான். இப்படி பேசுவதிலும் பழி சொல்வதிலும் நீதான் உனது இனத்தை இழந்து கொண்டிருக்கின்றாய். பழி சொல்பவர்களும் வீன் பேச்சு பேசுபவர்களும் உங்களது பிள்ளைகளையை தமிழ்ப்பள்ளியிலா போட்டீர்கள். அதுவும் இல்லை.

இன்று தமிழை ஆதரிக்கும் ஒரு கும்பலே தமிழ்ப்பள்ளியென்றால் தம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று ஒதுங்குகின்றது. இதனை கேட்கும்போது, ஒவ்வொரு தமிழனும் கூனிக்குறுகி போக வேண்டும்.

அது மட்டுமா, இன்று சுடச்சுட செய்திகளை வெளியாக்குகிறோம் என்ற பெயரில் பல நாளிதழ்கள் தகவலையே சேகரிக்காமல் அவர்கள் சொல்வதுதான் உன்மையென்று பல கோணங்களில் செய்திகளை வெளியிடுகின்றனர். இந்தியர்களுக்காக போராடி பல திட்டங்களை நனவாக்கும் ஒரு இந்திய அமைச்சரைப் பற்றி இந்திய நாளிதழ்களில் இல்லாததும் பொல்லாததும் எழுதுவது. இங்கு தமிழனை தாழ்வு படுத்த வேறு யாரும் தேவையில்லை.

 

 7 புதிய தமிழ்ப்பள்ளிகள்

 • தாமான்செந்தோசா தமிழ்ப்பள்ளி, கிள்ளான், சிலாங்கூர்
 • ஹீவூட்தமிழ்ப்பள்ளி, சுங்கை சீப்பூட், பேராக்
 • தாமான்கெலாடி தமிழ்ப்பள்ளி, சுங்கை பட்டாணி, கெடா
 • பன்டார்ஶ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளி, பாசிர் கூடாங், ஜொகூர்
 • பன்டார்ஶ்ரீ மக்கோத்தா தமிழ்ப்பள்ளி, உலு லங்காட், சிலாங்கூர்
 • பாயாபெசார் தமிழ்ப்பள்ளி, கெடா
 • தாமான்PJS 1 தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங், சிலாங்கூர்

அதோடு மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் 7 புதிய தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம் மிக சிறப்பான வகையில் மேம்பாடு அடைந்துக்கொண்டிருக்கின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள், எந்த காலகட்டத்தில் அரசாங்கம் புதிதாக 7 தமிழ்ப்பள்ளிகளை கட்ட முன் வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட 523 என்ற சரித்திரத்தில் இன்று தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் வருவதற்கு யார் காரணம். இந்த பிரதமரும் நமது பிரதிநிதிகளாக வீற்றிருக்கின்ற நமது அமைச்சர்களும்தான்.  இந்த 7 பள்ளிகளும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த சமுதாயத்தின் மெத்தனப்போக்கால் மொழியை மறந்து மாற்றான் பள்ளிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கும் இந்த தலைவர்கள்தான் காரணம் என்று வாதிடுவீர்களா. கன்டிப்பாக அப்படி ஒரு பிரச்சனை வந்தால் நம்மைப் போல ஒரு மொழி துரோகி உலகில் யாருமில்லை.

ஆகவே, கிடைக்கவில்லை என்று போராடுவதை விட அனைத்து இந்திய மாணவர்களும் தமிழ்ப்பள்ளியில் மட்டுமே பயிலத் தொடங்கினால் இன்னும் பல புதிய தமிழ்ப்பள்ளிகளின் திறப்புவிழாவை கண்டுகளிக்கலாம். இல்லையேல், பணம் சம்பாதிக்க தமிழ் உதவுமா என்ற கேள்வியோடு தமிழை மறந்து சென்றீர்களென்றால் இருக்கும் பள்ளிகளுக்கும் மூடுவிழாவை நாமே செய்துவிடுவோம். தமிழனாய் பிறந்து, நம் மொழியை இந்நாட்டில் நிலைநாட்ட பாடுபடுவோம் வாரீர்.

கயல்விழி தினேஷ்குமார-mytimes

Spread the News :-
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •