நாளை மகாதீரின் பேரனும் கெலிங் என்று இழிச்செய்வான்!

0
123

இனமான உணர்வுடைய எந்தவொரு மலேசிய இந்தியனும் இனவாதி மகாதீரின் அரசியல் சதியாட்டத்திற்கு துணைப்போகமாட்டார்கள்!இந்தியர்களை கெலிங் என்று கூறி இழிச்செய்வதும், இந்தியர்களைப் புறந்தள்ளி வேடிக்கைப் பார்ப்பதும் இவருக்கு புதியதல்ல !

22 ஆண்டுகளில் மலேசியாவை உலகளாவிய அளவில் வளர்சிக்கு வித்திட்ட இவர்.இந்தியர்களை திரும்பி பார்க்கவே இல்லை என்பதுதான் உண்மை. கெலிங் என்று கூறினாலும், சிரித்து கொண்டு அவருக்கு வாலாட்டும் சில நல்லவர்களே கொஞ்சம் குடித்த தாய்ப்பாலுக்காவது உணர்ச்சிவசப்படுங்கள் !

அரசியல் மற்றும் கட்சி கொள்கைகளில் நாம் பிரிந்திருக்கலாம் எதிரியாளியாகவும் இருக்கலாம் ஆனால் இனத்தையும்,மொழியையும் மாற்றான் இழிச்செய்யும் போது ஒரே குலத்தில் ஒரே தாயுக்கு பிறந்த நாம் ஒருசேர எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டாமா? மாற்றான் போட்ட எழும்பு துண்டுக்கு விசுவாசியாய் இருங்கள் ஆனால் இனமான உணர்வை இழந்து மாற்றனுக்காக கொக்கரித்து என்ன பயன்.

சடையனைப் பாரும்…என்னதான் எதிர்முனையில் இருந்தாலும் மாற்றான் இழிச்செய்யும் பொழுது ஒன்றினைவதை நாம் கண்கூடே பார்க்க முடிகின்ற ஒன்று. நாம் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ஒரு முறை மாற்றான் நம்மை இழிச்செய்ய நாமே வழிக்கொடுத்துவிட்டோம் என்றால்…மீண்டும் இவர்களுக்கு தொக்காய் போய்விடும் நம்மை ஈனமாக எண்ணி இழிச்செய்வதற்கு! ஒன்று சேர்

இந்தியனே…ஒருமித்த குரல் கொடு ! இன்று மகாதீர் கெலிங் என்று உம்மினத்தை எல்லிநகையாடலாம்… நாளை மகாதீர் பேரனும் இழிச்செய்வான்! சிந்தித்து செயல்படுங்கள் !

-சாணக்கியன்-

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice.

Spread the News :-
 • 17
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  17
  Shares

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.