மாடியிலிருந்து விழுந்து மூன்று வயது சிறுவன் பலி

0
213

பட்டர்வர்த், ஜூலை 7-  அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து விழுந்து 3 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.மாடியிலிருந்து விழுந்த அச்சிறுவன் தலையில்  ஏற்பட்ட பலத்த காயத்தால், சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தான்.

 சம்பந்தப்பட்ட அந்த சிறுவன், நேற்று காலை 11 மணியளவில் தமது அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மீது ஏறி ஜன்னல் வழியாக  விழுந்ததாகக் கூறப்படுகிறது.  சிறுவனின் தந்தை, தெலுக் ஆயர் தாவாரில் அமைந்துள்ள அரச மலேசிய ஆகாயப் படையில் பணிப்புரியும் வேளையல், சம்பவத்தின் போது சிறுவனின் தாயும், அவரது சகோதரியும் பக்கத்தில் அறையிலும் இருந்துள்ளனர்.

தரையில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அறிந்த அண்டை வீட்டார் உடனடியாக சிறுவனின் தாயாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்-வணக்கம் மலேசிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here