சுகாதார அமைச்சின் கீழ் ஜொகூர் பாருவில் இயங்கிவரும் “KOLEJ SAINS KESIHATAN BERSEKUTU” கல்லூரிக்கு பாராட்டுகள்

0
371

Kolej Sains Kesihatan Bersekutu சுகாதார அமைச்சின் கீழ் செயல்ப்படுகின்ற மருத்துவதுறையை சார்ந்த கல்லூரியாகும். SPM தேர்வு முடித்த மாணவர்கள் Nursing, Medical Assistant, Physio Teraphy, Occupational Terapy,Radioterapy போன்ற துறைகளில் முழு அரசு கல்வி உபகார சம்பளம் பெற்று பயிலுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இங்கு பயிலுவதற்கு மாணவர்கள் முறையாக Suruhanjaya Perkhidmatan Awam அகப்பக்கத்தின் வழி விண்ணப்பம் செய்ய வேண்டும். இம்மாதிரியான முழு அரசு கல்வி உபகார சம்பளம் பெற்று குறிப்பிட்ட இத்துறைகளில் பயிலுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பற்றி நம்மில் பலர் தெரிந்துகொள்வதில்லை.

ஜோகூர் பாருவில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் 50-திற்கும் மேற்ப்பட்ட இந்திய மாணவர் முழு அரசு உபகார சம்பள சலுகையில் பயிலுகின்றனர் என்பது பெருமைக்குரிய தகவலாகும். அதோடு இங்கு நிறைய இந்திய விரிவுரையாளர்களும் பணிப்புரிகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. நமது இந்திய மாணவர்கள் இங்கு சிறந்த முறையில் பயிலுவதற்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்படிருகின்றன மற்றும் இந்திய விரிவுரையாளர்களும் அதிக கவனம் செலுத்தி இவர்களின் வளர்ச்சிக்கு உருதுணையாக இருகின்றனர். பல்கலைகழகம் போன்று இந்திய மாணவர்களுகென்று “BIRO AGAMA HINDU KSKBJB” என்ற கழகம் அமையபெற்றிக்கிறது  இவ்வியக்கித்தின் மூலம் இந்திய மாணவர்கள் சமூக பணிகள், சமய வழிப்பாடு, தன்னார்வளர் தொண்டு, கல்வி கருத்தரங்கு மற்றும் மாணவர் கல்வி வளர்ச்சி போன்றவற்றில் ஈடுபட முழு ஆதரவுடனும் சுதந்திரத்திரதுடனும் செயல்ப்படுகின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்கும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கு இம்மாணவர் குழுமத்திற்கு தூண்டுகோலாய் இயங்குகிறார் இவ்வமைப்பின் ஆலோசகர் மற்றும் இக்கல்லூரியின் விரிவுரையாளர் திரு.சந்திரசேகரன் பழனி. இவரோடு சேர்ந்து மாணவர் வளர்ச்சிக்கு அனைத்து இந்திய விரிவுரையாளர்களும் துணைப்புரிகிறார்கள் என்பது பாராட்டகுரிய செயலாகும்.

தைப்பூசத்திருநாளில் தம்போய் (Tampoi) ஆலயத்தில் இலவச மருத்துவ முகாம் பணி, தன்னார்வளர் உதவி புரிதல், ஆலயத்தை சுத்தப்படுத்தல் போன்றவற்றை செய்துள்ளனர் இம்மாணவர்கள். தொடர்ந்து , அன்மையில் வணக்கம் மலேசியா ஏற்ப்பாட்டில் நடைப்பெற்ற ஓரங்க நாடகத்திலும் இம்மருத்துவ கல்லூரிமாணவர்கள் கலந்துக்கொண்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது பெருமைக்க்கூரிய தகவலாகும். மருத்துவ கல்லூரி மாணவர்கள் இவைப்போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மிக நல்ல செயல். விரிவுரையாளர்களும் மாணவர்களும் இணைந்து  “Tutors Trainee Get Together Day” என்ற ஒருகிணைப்பு நிகழ்சியை முதல் முறையாக இக்கல்லூரியில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

மருத்துவ கல்லூரி மாணவர்களை இம்மாதிரியான நல்ல காரியங்களில் ஈடுப்படுத்தி தூரநோக்கு சிந்தனையுடன் செயல்ப்பட்டு கொண்டிருக்கும் “BIRO AGAMA HINDU KSKBJB” என்ற இக்கல்லூரியின் இந்திய மாணவர் இயக்கத்தின் தலைவர் சகோதரர் செல்வகுமார் தங்கமணி  மற்றும் துணைத்தலைவர் சகோதரர் தினேஷ் கண்ணதாசன் , அவர்களுக்கு நமது பாராட்டுகள் உரிதாகும்.

கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் கல்வி தேர்வு, சமூக பணி, தனிதிறன் ஆளுமை, சமூகநல சிந்தனை,தூரநோக்கு சிந்தனை மற்றும் சிறந்த தலைமைத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கி வளர்ச்சி பெறுவதற்கு ஆசிரியரின் பங்கு மிக அவசியம். எனவே நல்ல சமுதாய உருவாக்கதிற்கு கண்டிப்பாக இது ஒரு நல்ல முன்னுதாரணமாய் அமையும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்வோம். இம்மாதிரியான நம் இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்கும் ஈடுப்பாட்டிற்கும் அடிதளமாய் இருக்கும் சுகாதார அமைச்சுக்கு நமது பாராட்டுகள் உரிதாகும்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •