கழிவு நீர் தொட்டியில் 6 துண்டுகளாக வெட்டப்பட்ட குழந்தையின் சடலம்

0
352

அலோர் ஸ்டார், ஜூலை 8- கெடா, ஜித்ராவில் கழிவு நீர் தொட்டியில் 6 துண்டுகளாக வெட்டப்பட்ட குழந்தையின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    இதனையடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது குழந்தைப் பிறப்பை மறைப்பதற்காக இவ்வாறான செயல் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக போலீசார் சவப்பரிசோதனை நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.தற்போதைக்குக் கழிவு நீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் அனைத்து உடல் பாகங்களும்  சுல்தானா பாஹ்யா மருத்துவமனைக்குத் தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர், துணை கமிஷனர் முகமது நாசிர் யா தெரிவித்தார்.நேற்று முன் தினம், 20 வயது மதிக்கத்தக்க  இளம் பெண் ஒருவர் தாம் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதாக ஜித்ரா மருத்துவமனையிலிருந்து காவல்த்துறைக்குத் தகவல் கிடைத்தது. எனினும், விசாரணையில் குழந்தையின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள்  சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கழிவு நீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. -vanakam malaysia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here