இந்திய மாணவர் உருமாற்ற செயல்த்திட்டம் – கல்வி, சமூக நல ஆய்வு அறவாரியத்தின் தீவிர முயற்சி !

0
597

காஜாங் (Mytimes)- காஜாங் வட்டார கல்வி, சமூக நல ஆய்வு அறவாரியம் (EWRF) Civil Society Intervention – CSI CAMP 2015 எனும் தன்முனைப்பு தூண்டல் முகாமினை மிக சிறப்பாக காஜாங் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மண்டபத்தில் நடத்தியது.

பல மாதாங்களாக குறிப்பிட்ட சில மாணவர்களைத் பள்ளியின் மூலம் தேர்ந்தெடுத்து அவர்களை கண்காணித்து, அவர்களின் பிரசசினைகளை கண்டறிந்து அதற்கு ஒரு முடிவு கண்டு வழிவகுத்துள்ளனர். அவர்களின் முயற்சியின் ஒரு பகுதியே இத்தன்முனைப்பு தூண்டல் முகாம். கல்வியில் சிறந்து விளங்காமை, வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுதல், பள்ளி பருவத்திலே காதல் வயப்படுதல், குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்படுதல், போன்ற சிக்கல்களில் சிக்கி சீரழியும் மாணவர்களை நல்வழிப்பாதையில் உருமாற்றம் செய்வதே இச்சீரமைப்புப்பணியின் நோக்கமாகும்.

இம்மாதிரியான மாணவர்ளுக்குதான் சிறப்பு கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும், இவர்களுக்கு பல திறமைகளும் ஆற்றல்களும் உள்ளது.சரியான வழிக்காடுதலும் தூண்டுகோலும் இல்லாமையால்தான் இம்மாணவர்கள் தடம் மாறி சென்றுவிடுகின்றனர். எனவே, தொடர் முயற்சியினால் கண்டிப்பாக இம்மாணவர்களை ஒரு நல்ல வழிக்கு கொண்டு செல்ல முடியும் , அதற்க்கான ஆயுத்தப் பணிகளை தொடர்ந்து செயல்ப்படுத்தப்படும் என்று காஜாங் வட்டார கல்வி, சமூக நல ஆய்வு அறவாரியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.

இந்த (CSI CAMP 2015) முகாம் தொடர்ந்து நாடுதளுவிய அளவில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பெற்றோரின் ஆதரவுதான் மிக முக்கியமாக தேவைப்படுகிறது அப்பொழுதுதான் மாணவர்கள் முழுவதாக உருமாற்றம் பெற முடியும். சமூக நலன் சம்பந்தப்பட்ட இம்மாதிரியான நிகழ்ச்சிக்கு காஜாங் வட்டாரத்தில் என்று ஆதரவு வழங்கி வரும் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கும் , தேசியப் பலகலைக்கழக (UKM) மாணவர்களுக்கும் மற்றும் இதர ஆதரவாளர்களுக்கும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.(Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •