அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

0
169

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுத்தான் வழக்கம்! அரைக்குறையாகவும் அரசல் புரசலாகவும் தெரிந்த தகவலை கொண்டு அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வளர்ப்பது அர்த்தமற்றதாகும். குறைக்கூறி ஏளனம் செய்யும் இவர்களின் கூற்றுக்கு மூலாதாரம் வெறும் எதிர்கட்சியினரின் பரப்புரை மட்டுமே! உண்மை தகவல் அறிந்துகொள்ள இவர்கள் விரும்புவதும் இல்லை காரணம் எதிர்கட்சியின் கொள்கை அப்படி.

உணர்ச்சி வசப்படும் இளைஞர்களும் , வெள்ளந்தியாக இருக்கும் பாமரர்களும்தான் எதிர்கட்சியினரின் பொய் தகவல் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளுக்கு பலி ஆகின்றனர்! எத்தனை உண்மை தகவல்கள், ஆதார சான்றுகள் இருந்தாலும் அதனை ஏற்றுகொள்ள விரும்புவதில்லை இவர்கள்,தொடர்ந்து சராமாறியாக தேசிய முன்னணி அராசாங்கத்தை கவிழ்ப்பதிலேதான் இவர்களின் கீளருப்பு நோக்கம். இவர்களுக்கு ஏற்றப்பட்ட விஷம ஊசி தீவிரமாக வேலை செய்கிறது.

பொய்யான தகவல்கள், திரிக்கப்பட்ட கட்டு கதை, தலைமைத்துவத்தில் இருப்பவரை மிக கேவலமாக விமர்சிப்பது, கொச்சை வார்த்தைகளில் இழிசெய்வதுதான் எதிர்கட்சியினர் ஆயுதம். இது போன்ற கீழ்தனமான யுக்திகளைக் கொண்டு தேசிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சியையும் உழைப்பையும் ஈனப்படுத்துவது இவர்களின் வழக்கம்.

ஆதாரமற்ற, அர்த்தமற்ற எதிர்கட்சியினரின் பசப்புரையில் மங்கி போயிருக்கும் அரண்டவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது கடினம்தான்.இருப்பினும் உண்மையை எத்துணை தூரம் இவர்கள் மூடி மறைத்து தேசிய முன்னணிக்கு குழிவெட்டினாலும், வெற்றி கண்டிப்பாக உண்மையின் பக்கமே என்பதே திடமான உறுதி! பொய்யான திரிக்கப்பட்ட தகவல்களை நம்பாதீர்கள்.தீர விசாரித்து முடிவெடுங்கள் !

-சாணக்கியன்-

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice.

Spread the News :-
 • 4
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4
  Shares