ம.இ.கா-விற்கு தேசிய தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியம், முழுஆதரவுடன் வெற்றிப் பெற்று இன்றோடு 30 நாட்களாகின்றது. இந்த 30 நாட்கள் என்பது, கண்டிபாக ம.இ.காவின் சரித்திர நாளேட்டில் குறிப்பிடதக்க வேண்டியவையாகும். ம.இ.காவின் தன்மான போராட்டத்தின் வெற்றியின் அடையாளமே, இந்த 30 நாட்கள்.

துன் சம்பந்தன் போன்ற மூத்த தலைவர்களின் உயிர் மூச்சாய் அமைந்த ம.இ.கா,  சில குறிப்பிட்ட தரப்பினரின் சுயநல பதவி போராட்திற்காக சந்தி சிரிக்கும் அளவிற்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஒரு கருப்பு சரித்திரத்தைப் பதித்து விட்டது. உச்ச நீதிமன்ற வாசல் சென்று, ஊடகங்களின் வழி எள்ளி நகையாடப் பட்ட ம.இ.கா-விற்கு, புத்துயிர் கொடுத்தவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் அவர்தம் குழுமத்தினர் ஆவார். ம.இ.கா மிகவும் வலுவிழந்து, ஒற்றுமை சிதைந்து, தலைமைத்துவ வழிகாட்டியின்றி தலைமைத்துவ பிணியில் சிக்கித் தவித்தது நாடறிந்த தகவலாகும்.

இருப்பினும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு தன்னால் இயன்றவரை முயன்று , ஆகஸ்ட் 21 – ஆம் திகதி கட்சியின் தேசிய தலைவராக பதிவியேற்று, ம.இ.காவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றார் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். இன்றோடு அவரின் அவசர சிகிச்சை வெற்றிகரமாக 30 நாட்களை எட்டிவிட்டது. ம.இ.கா மீண்டும் வலுவுடன் புத்துயிர் பெற்று மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.இது பாராட்டகூடிய செயலாகும்.

புத்தாக்க சிந்தனை மற்றும் தூரநோக்குடன் செயல்படும் சுப்ரமணியத்தின் பலம், இளைஞர் படை என்றால் அது மிகையாகது. அவரின் போராட்டத்தில் முதுகெலும்பாக திகழ்ந்தது அவரின் இளைஞர் படை. இளையோர் சிந்தனைக் கொண்டு அவர்களுக்கு தோழனாய் இருந்து , முழுஆதரவு வழங்கி , வருங்கால தலைவர்களாகிய இளைஞர்களை ஊக்குவித்தார்.தொடர்ந்து மகளிர் அணியிடையே தலைமைத்துவ உருமாறற்த்தை உருவாக்கினார்.

வீதி வரை சென்றால்தான் மண் வாசனை தெரியும் என்பதற்கொற்ப, கட்சியில் நிலவிய அத்துணைப் பிரச்சனைகளையும் தானே ஒவ்வொரு இடத்திற்கு சென்று தீர்த்து அதற்கு முடிவு கட்டியுள்ளார். தலைவனே களத்தில் இறங்கினால்தான் கட்சி வலுப்பெரும் என்ற எண்ணம் கொண்டு, செயல்பட்டு ம.இ.காவின் தலைமைத்துவத்தை ஒருகிணைத்தார்.

இந்த 30 நாட்களில் ம.இ.கா-விற்கு தேசிய தலைவராகப் பதவியேற்று, ஒருவழியாக கட்சியின் பூசலுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். முந்தைய தலைமைத்துவத்தில் சதித்திட்டத்தால் ஒதுக்கப்பட்ட,சிறந்த ஆற்றல் கொண்ட தலைவர்களை மீண்டும் மக்கள் சேவைப்பணிக்கு திசைத்திருப்பியுள்ளார்,  ம.இ.கா-வின் புதிய தேசிய தலைவர். அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர ஊக்குவிப்பு தரவேண்டும் என்பதுதான் சுப்ரமணியத்தின் தலைமைத்துவம். குறைப்பாடுகள் என்பது அனைவரித்திலும் இருக்கக்கூடியது ஆனால் அதனை நிவர்த்தி செய்ய திறமையை வளர்ப்பதுதான் தலைமைத்துவத்தின் சிறப்பு என்கிறார் இவர்.

இவர் இந்திய மக்களுக்கு மட்டும் தலைவராக இல்லாமல் மலேசிய மக்களின் பார்வையில் ஒரு தலைசிறந்த சுகாதார அமைச்சாராகவும் விளங்குகிறார். கொடுக்கப்பட்ட கடமையை செம்மையாக செய்து முடிப்பதில் வல்லமைக் கொண்டவர். இந்த 30 நாட்களில் தேசிய ரீதியில் அனைத்துலக அளவிலான மாநாடுகளிலும் கலந்து பல தூரநோக்கு சிந்தனைகளை பகிர்ந்து நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பிரதமரும் இதர அமைச்சர்களும் பாராட்டக்கூடிய அளவிற்கு ம.இ.கா-வை நிலைநிறுத்தியுள்ளார் சுப்ரமணியம். முன்னோட்ட சிந்தனை கொண்ட இவரை பிரதமர் தேசிய முன்னனி கட்சியின் உதவி தலைவராகும் நியமித்துள்ளார் என்பது இதற்கு ஒரு சான்றாகும்.

தலை இருக்கையில் வால் ஆடாது என்பது போல், இப்பொழுது ம.இ.கா- விலும் இந்திய சமுதாயத்திலும் தேசிய தலைவரின் மதிப்பு மிகுந்து தலைமைத்துவம் சீரடைந்துள்ளது. ம.இ.காவின் தேசிய தலைவராகவும் , மலேசிய சுகாதார அமைச்சருமாகிய டாக்டர் எஸ் சுப்ரமணியம் தொடர்ந்து சிறந்த மக்கள் சேவைப்பணியை வழங்க வேண்டும், இந்தியர்களின் வளர்சியை அதிகப்படுத்த வேண்டும், சிறந்த சமுதாயமாக வளம்பெற தொடர் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மக்களின் அவா.மருதுவரின் சிக்கிச்சை 30 நாட்களில் வெற்றிப்பெற்றுள்ளது, எனவே தொடர்ந்து சமுதாய பணியை தொடர (Mytimes) டாக்டர் சுப்ரமணியத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. (Mytimes)

 

 

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •