மலாக்கா (Mytimes) – “சாதனை இளைஞர்களே,வாருங்கள் சாதனை படைப்போம்” என்ற தலைப்போடு இன்று ஆயர் கெரோ, மலாக்காவில் இந்திய இளைஞர்களுக்கா மலாக்கா மாநில முதல்வர் தலைமையில் சிறப்பு தன்முனைப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். காலை 9 முதல் மாலை 5 வரை இந்த சிறப்பு தன்முனைப்பு கருத்தரங்கு தங்கு தடையின்று சிறப்புற நடந்தேறியது. ஏறக்குறை 100 -க்கும் மேற்ப்பட்ட மலாக்கா மாநில சுற்றுவட்டார இந்திய இளைஞர்கள் இந்த சிறப்பு கருத்தரங்கில் திரண்டிருந்தனர். இதுவொறு ரந்தாவ் பாஞ்ஞாங் , மஷ்ஜிட் தானா மலாக்கா ம.இ.கா தொகுதி பிரிவின் முயற்சியாகும்.

சிறந்த தன்முனைப்பு பேச்சாளர்களாகிய ,மலாயா பல்கலைக்கழக முனைவர் திரு மணிமாறன் மற்றும் மலேசிய தலைமைத்துவ மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகரும் நாடறிந்த வழக்கறிஞர் திருமதி பரிடா பெகும் அப்துல் ரஹ்மான் இந்த கருத்தரங்க்கில் சிறந்த தன்முனைப்பை வழங்கினர். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, கருத்துக்கள் இளைஞர்கள் உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு ஏற்ப்புடையதாய் அமைந்திருந்தது.

இளைஞர்களின் வளர்ச்சி, சமூக ஈடுபாடு, கலைக்கலாச்சார அறியாமை, சமூக ஊடங்களினால் வழி பெறப்படும் நன்மை தீமைகள் பற்றிய விளக்கமளிப்பு போன்ற முக்கிய அம்சங்களை தங்களின் கருத்தரங்கில் வழங்கினர் பேச்சாளர்கள்.இதற்கு கலந்துக்கொண்ட இளையோர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது.

நிகழ்வில் சிறப்பு பிரமுகராய் மலாக்கா மாநில முக்கிய தலைக்கட்டுகளில் ஒருவராகிய டத்தோ ஜி.கண்ணன் சிறப்பு வருகைப்புரிந்திருந்தார். மலாக்கா மாநில ம.இ.கா வின் துணைத்தலைவராக பொருப்பேற்றப் பின் முதலாவதாக அவர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி இதுவென்று தன்னடக்கத்தோடு உரையில் தெரிவித்தார்.

இன்றைய இந்திய சமுதாயத்தின் முதுகெலும்பு இளைஞர்கள், சமுதாய வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு மிக முக்கியமாகும். பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழகம்  செல்லும் வரை முறையாக கண்காணித்து அவர்கள் சிறப்பான தொழிலில் அமர்ந்து சமுதாய செல்வங்களாக உருப்பெற நாம் உருதுணையாக இருக்க வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் மட்டும் கடமையாற்றினால் மட்டும் போதாது, தனியார் நிறுவனங்களும், அரசு சார இயக்கங்களும் மற்றும் பொதுமக்களும் தோல்கொடுத்து செயல்ப்பட வேண்டும்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here