பட்டு மகளுக்கு பட்டை பூசிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் வாரியத் தலைவர்

0
271

5 ஏப்ரல்- மை டைம்ஸ்- இரண்டு நாட்களுக்கு முன்பு கஸ்தூரி பட்டு நாடாளுமன்றத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தில் கல்வித் துணை அமைச்சர் உண்மை பேசவில்லை என்பதனையும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் நிலவரம் என்ன என்ற, செல்லுபடியாகாத கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கல்வித் துணை அமைச்சரின் உடனடி கானொலி படைப்பு அமைந்திருந்தது. அதே வேளையில் உண்மை நிலவரத்தை விளக்கும் வண்ணம் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் வாரியத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், இது தொடர்பாக கஸ்தூரி பட்டு எந்த விதமான தகவல்களையும் முழுமையாக சேகரிக்காமல் நாடாளுமன்டத்தில் பேசியது வேதனையளிப்பதாக பத்திரிக்கை செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

உண்மையற்ற தகவல்களை வேகமாக பேசினால் உன்மையாகிவிடாது எனவும் அவர் கஸ்தூரி பட்டுவை சாடியுள்ளார். 2013-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 3.5 ஏக்கர் நிலம் பல காரணங்களால் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஏதுவாக இல்லாததால் அந்த நிலம் மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இப்பள்ளிக்கூடத்திற்கான 3.5 மில்லியன் ரிங்கிட் பள்ளி மேலாளர் வாரியத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதன் பின்னர், தாமான் சுருலிங் மாஸ் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சுங்கை பராக் பா இடைநிலைப்பள்ளியின் மாணவர் விடுதிக்கு எதிரே கல்வி அமைச்சுக்கு சொந்தமான ஏறத்தாழ 9 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்கு என உறுதி செய்யப்பட்டு ஜூலை 2017-ம் ஆண்டு கடிதமும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அடையாளம் காணப்பட்ட நிலம் முறையாக அளக்கப்பட்ட பிறகு கல்வி அமைச்சின் அனுமதிக்கு அனுப்பபட்டதாகவும் அதன் அனுமதி கடிதம் கடந்த மார்ச் இரண்டாவது வாரம் கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இக்கட்டடத்தின் வரைபடம் வெகுவிரையில் கல்வி அமைச்சின் அனுமதிக்கு அனுப்பப்படவிருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகு ஊராட்சி மன்றம் போன்ற அரசாங்க இலாக்காக்களின் அனுமதியை வாரியக்குழு நியமித்த கட்டட மதியுரை குழு மேற்கொள்ளவிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கி கல்வித் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் இப்பள்ளிக்கூடத்திற்கு வருகை புரிந்து பள்ளிக்கூடம் தொடர்பான கட்டட வேலைகளை பற்றி கேட்டறிந்தும் பல்வேறு ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் புரிந்துள்ளார் என்று தனது பத்திரிக்கை அறிக்கையில் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.
அதே வேளையில் இப்பள்ளிக்கூடம் பற்றி முழு அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் இக்கட்டுமானம் பற்றிய விளக்கங்களை முறையாக கேட்டு அறியாமல் கல்வித் துணை அமைச்சர் மீது அபாண்டமான பழியை போடுவது சரியல்ல என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இதன் வழி கஸ்தூரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தவறான தகவல்கள் சென்றடைய காரணமாக இருக்க கூடாது என்று தமதறிக்கையில் கூறியுள்ளார். -மை டைம்ஸ்

Spread the News :-
 • 28
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  28
  Shares