ஆஸ்திரேலியாவிலும் செல்ஃபி எடுக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டிக்குகளுக்குத் தடை:

0
340

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் செல்பி ஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபலமான டிஸ்னி பூங்காவில் செல்பி ஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, டிஸ்னி நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள ஓப்ரா ஹவுஸில் செல்போனில் செல்ஃபி எடுக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டிக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிட்னி ஓப்ரா ஹவுஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதே சமயம் ஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கலாம் என்பதால், ஓப்ரா ஹவுஸுக்கள் செல்ஃபி ஸ்டிக்குகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here