87 வயது பாட்டியைக் கற்பழித்த மாணவர்கள்: 30 ஆண்டு சிறை

0
361

நியுயார்க்-அமேரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில்  உள்ள முதியோர் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த  இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கற்பழித்தனர்.

அதோடு நில்லாமல், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் தூள் கரைசலை  அந்த பாட்டியின் வாயில் ஊற்றி  அவரைக் கொல்ல முயற்சித்து தப்பியோடி விட்டனர். அறையில் இருந்த அவசர அழைப்பு பொத்தானை அவர் போராடி அழுத்தி விட்டதால், காவலாளிகள் அவரைக்  காப்பாற்றினர்.

இச்சம்பவத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாட்டி  நடமாட முடியாத முடக்குவாத நோய்க்குள்ளானார். தற்போது சக்கர நாற்காலியில் வலம் வரும் அந்த பாட்டியை இந்த நிலைக்குத் தள்ளிய மெலன்சன் (வயது 15), மற்றும் ரேமண்ட் மைக்கல் மிரிண்டா (வயது 14) ஆகியோரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தினர். இவர்கள் இருவரும் 18 வயது நிறைவடையும் வரை   சிறார் காப்பகத்திலும், 18 வயதுக்குப் பின்னர்  சராசரி சிறையில் 30 ஆண்டுகள் வரை சிறைதண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்திற்கு வந்த அந்த பாட்டி “ நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன என்பதை என் முகத்தைப் பார்த்து உணர்ந்துக்கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தைப் பறித்த நீங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்” எனக் கண்ணீர் மல்க கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here