30 வினாடிகளுக்கு சபா மாநிலத்தை உலுக்கியது நிலநடுக்கம் !

0
825

கோத்தா கினாபாலு 5 ஜூன் 2015 – இன்று காலை ஏழு மணியளவில் ரானாவ் மாவட்டத்தை  அதிர செய்தது 6.0-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். மலேசிய நாட்டின் போர்னியோ தீவில், சபா மாவட்டத்தில் ஏற்ப்பட்ட இந்த நில அதிர்வு மிகபெரிய பொருள் சேதத்தையும் உருவாக்கவில்லை மற்றும் சுனாமி எச்சரிக்கையையும் கோடி காட்டவில்லை என்று அமெரிக்க புவியியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். மலேசியாவில் இதுப்போன்ற பூகம்பங்கள் நடந்தது இல்லை மற்றும் மலேசியா பாதுகாப்பான மையத்தில்தான் இருக்கிறது என்று அவ்வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். மிக பயங்கரமான இந்த புவி உலுக்கள் சபா ரானவ் மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சில அங்காடிகளின் கண்ணாடிகள் இந்நிலநடுக்கத்தினால் உடைப்பட்டிருகின்றன வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் புவியியல் நிபுனர்கள்,மாவட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உதவிப்படையினரும் அம்மாவட்டத்திற்கு களமிறக்கப்பட்டிருகின்றனர்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •