2013-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ; கமலநாதனின் சாதனை என்ன?

0
723

2.0 2012- ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பட்டியலிடப்பட்ட 39 தமிழ்ப்பள்ளிகளின் இணைக்கட்டடம், இடமாற்றம்.

பள்ளிக்கூடங்களைக் கட்டுவதென்பது சாதாரனமான விஷயமன்று, ஒரு கட்டடத்தை கட்டுவதற்கே பல செயல்திட்டங்களை பின்பற்ற வேண்டியுள்ளது. இவரின் வருகைக்கு பிறகு பட்டியலிடப்பட்ட 39 பள்ளிக்கூடங்களிலும் உள்ள கட்டடங்களின் பிரச்சனைகளைக் கையாண்டு அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, ஒவ்வொன்றையும் மிக சிறப்பான வகையில் வெற்றிகரமாக கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். இதுவே இவரின் 5 வருட ஆட்சி காலத்தில் நடந்த மிக பெரிய சாதனையாகும்.

2.1 தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம்.

சரி கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம், இவரின் வருகைக்கு முன்பு எந்த தமிழ்ப்பள்ளிக்கூடமாவது லட்சக்கனக்கில் மானியத்தைப் பற்றி பேச முடிந்ததா, இவரின் வருகைக்கு பிறகு கில்லிக் கொடுத்த அரசாங்கத்திடம் கேட்டு அல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 2015-ம் ஆண்டு அரசாங்க உதவிபெறும் தமிப்பள்ளிகளுக்காக 50 மில்லியன், 2016-ம் ஆண்டு 16.5 மில்லியன் மற்றும் 2017-ம் ஆண்டு அரசாங்க பள்ளிக்கூடங்களுக்கும் அரசாங்க உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கும் 50 மில்லியன் என வாரி வழங்கிய வள்ளர் என்றுதான் இவரை வர்ணிக்க வேண்டும். இதன் விளைவாக இன்று தமிழ்ப்பள்ளிகள் தோற்றத்திலும் கட்டுமான வசதிகளிலும் மற்ற பள்ளிகளுக்கு ஈடாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன.

2.2 தமிழ்ப்பள்ளிகளில் விளையாட்டு வசதிகள்

இன்று தமிப்பள்ளிகளில் விளையாட்டு வசதிகள் அதிகமாக இருக்கின்றன என்றால் அதற்கும் காரணம் இவரே. விளையாட்டுத் துறையில் ஒரு காலத்தில் சரித்திரம் படைத்து வந்த நம்மின மாணவர்கள் இனியும் வசதிகள் குறைவு என்று சளைத்துவிட கூடாது என்பதற்காக விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மானியத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறார். இந்த மானியத்தை பயன்படுத்தி இன்று எத்தனையோ மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது அசைக்க முடியாத உண்மை. மக்களின் பிரதிநிதியாக இருந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இவர் மிக சரியாக தமது பங்கினை ஆற்றியுள்ளார்.

2.3- 7 புதிய பள்ளிக்கூடங்கள்

இதுவரை தமிழ்ப்பள்ளிகள் வசதிகளில் உயரவேண்டும் என்று நினைத்த நமது தலைவர்களில் அதன் எண்ணிக்கை உயரவேண்டும் என்று முதலில் விதை விதைத்தவர் நமது தற்போதைய பிரதமர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள். 2012-ம் ஆண்டு பிரதமர் அளித்த வாக்குறுதியை நனவாக்க வேண்டும் என்ற வேட்கையோடு தாம் பதவிக்கு வந்த நாள் தொடங்கி முயற்சித்தவர் நமது கல்வித் துணை அமைச்சர் மான்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள். அவரின் முயற்சியின் பால் பிரதமரின் வாக்குறுதிகளும் 90 சதவீதம் நனவாகிவிட்டன. கெடாவிலுள்ள கோ.சாரங்கபானி பள்ளிக்கூடம் கட்டப்பட்டு மாணவர்கள் பயில தொடங்கிவிட்டனர். அடுத்து கிள்ளானில் கட்டப்படும் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியும் மிக அதிநவீன வசதிகளோடு கட்டப்பட்டு செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றது. மேலுமுள்ள 5 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப்ணிகளும் செவ்வனே நடந்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே கல்வித் துணை அமைச்சராக, இந்திய மக்களின் பிரதிநிதியாக அமர்ந்த்தப்பட்டு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை பல சவால்களைத் தாண்டி நிறைவேற்றுவதில் இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. கல்வி அமைச்சில் பதவி கிடைத்து அதில் வேண்டிய சலுகைகளை எப்படி இந்திய சமுதாயத்துக்கு பயன்மிக்கதாக பெற்றுத் தர வேண்டும் என்ற யுக்திகளை அறிந்த சாணக்கியன் என்றும் இவரைக் கூறலாம்.

2.4 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் விழா

இயல் இசை நாடகம் இவையனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்மொழி. ஒரு மாணவன் படிப்பில் மட்டுமல்லாமல் அனைத்துத் கூறுகளிலும் கைத்தேர்ந்தவனாக இருந்தால்தான் முழுமையான மாணவன் என்ற அடைவுநிலையை அடைய முடியும். மாணவனை முழுமைப்படுத்த எஞ்சியுள்ள அவனது படைப்பாற்றளை வெளிக்கொணர வைப்பதற்காக மாணவர் விழா ஒவ்வொரு மாவட்டமாக கல்வித் துணை அமைச்சரின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஒரு வருட கோலாகலத்தில் மட்டும் நின்றுவிட கூடாது என்ற நோக்கத்தில் கல்வி அமைச்சோடு கலந்து பேசி இவ்விழாவினை கல்வி அமைச்சின் கலைக்கல்வி மற்றும் பண்பாட்டு பிரிவு இவ்விழாவினை ஏற்று நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இதனை வருடாந்திட கால அட்டவனையில் பொருத்தியதால் இதனை ஒவ்வொரு வருடமும் இவர்கள் நடத்தியே ஆக வேண்டும். இதுபோன்ற போட்டிகளிலும் விழாக்களிலும் மாணவன் தன் படைப்பாற்றலை வெளிக்கொணர முடியும். இங்கிருந்துதான் அடுத்த தலைமுறையின் பேச்சாளர்களும் தலைவர்களும் உருவாக்கப்படுகிறார்கள். இப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாணவனால் ஒரு சபையில் பயமின்றி தனது கருத்துக்களை ஒப்புவிக்க முடியும். அதே சமயத்தில் இவ்விழாவில் நடத்தக்கூடிய கட்டுரை எழுதும் போட்டி, சிறுகதை போட்டி, கவித மனனம் போட்டி, பட்டிமன்றம் என ஒவ்வொரு போட்டியும் மாணவனை பேச்சாற்றல் மிக்கவனாகவும் எழுத்துத் துறையில் கைத் தேர்ந்தவனாகவும் உருவாக்க வழி வகுக்கின்றது. ஆகவே, மாணவர்களை பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கைத்தேர்ந்தவர்களாக உருவாக்கி எதிர்கால இந்திய சமுதாயத்தை செதுக்க்குவதிலும் நமது கல்வித் துணை அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார் என்பது கண்கூடாக தெரிகின்றது.

2.5 தேசிய ஆசிரியர் திலகம் விருது

60 ஆண்டுகால ஆட்சி முறையில் எத்தனை தலைவர்களை இந்திய சமுதாயம் பார்த்திருக்கிறது. அவர்கள் அனைவரில் எத்தனை பேர் ஆசிரியர்களை கௌரவித்துள்ளனர். இவர்களில் முற்றிலும் மாறுபட்டவர்களாக இந்திய சமுதாயத்திற்கு விடிவெள்ளியாய் அமைந்தவர்தான் தற்போதைய கல்வித் துணை அமைச்சர். ஆசிரியர்களின் வேலையை சேவையாக பார்ப்பவர்கள் மத்தியில் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று புறப்பட்டவர் இவர். கடந்த ஆண்டு சரித்திரத்திலேயே முதன் முதலாக தேசிய தமிழாசிரியர் திலகம் விருது 2017 கல்வி அமைச்சின் முழு அங்கீகாரத்தோடு நடத்தப்பட்டது. சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை என்பது ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்த இவர், இப்போதே உலகம் போற்ற அர்ப்பணிப்பூ ஆசான்களாக இருக்கும் ஆசிரியர்களை அங்கீகரித்து அவர்களை உற்சாகப்படுதியுள்ளார். இதற்காக ஒரு தனி குழுவை அமைத்து இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக கடந்த ஆண்டு நடத்தினார். இதன் வழி ஆசிரியர்கள் தங்களது கல்வி கற்றல் கற்பித்தல் திறனை தானாகவே மேம்படுத்திக் கொள்ள அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, கல்வித் துணை அமைச்சராக பொறுப்பேற்று ஆசிரியகளை கௌரவிக்கவும் கல்வித் துணை அமைச்சர் மறக்கவில்லை.

ஆகவே, தான் பதவியேற்ற காலம் தொட்டு தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் தமிழ்மாணவர்களுக்காகவும் தமிழ் ஆசிரியர்களுக்காகவும் போராடும் இதுபோன்ற உயர்ந்த மனம் கொண்ட கல்வித் துணை அமைச்சர் கிடைத்த நாம் அனைவரும் அதிஷ்ட சாலிகளே. சரித்திரத்தில் இடம் பிடித்த தலைவர்களுள், இந்திய கல்வி வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய கட்டாயத் தலைவராக இவர் என் கண்களுக்கு தெரிகின்றார். மீண்டும் ஆயிரம் குறைகளை குடைய நினைப்பவர்கள் குடைந்து கொண்டே போகட்டும், நாம் சரித்திரம் படைப்போம் என மிளிந்து கொண்டு போகும் இவரைபோல் சிறந்த மக்கள் பிரதிநிதியை இந்திய சமுதாயம் இதுவரை கண்டதில்லை.

சுடர்விழி தினேஸ்குமார்

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice

Spread the News :-
 • 61
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  61
  Shares