16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் வீழ்ச்சி

0
205

பெட்டாலிங் ஜெயா ஜூலை 7- மலேசியா ரிங்கிட்டின்  மதிப்பு 16 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அரசாங்க முதலீட்டு நிதியிலிருந்து பிரதமர் திரு. நஜிப்பின் சொந்தக் கணக்கிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மாற்றிவிடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இதற்கு ஒரு காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று சரிந்து 3.809 ரிங்கிட் எனப் பரிவர்த்தனையானது.1998 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இதுவே ஆகக் குறைந்த மதிப்பு.இதனிடையே , மலேசியப் பங்குகளின் விலையும் இன்று சரிந்தது.கிரீஸ் கடன் நெருக்கடி தொடர்பாக நடைபெற்ற வாக்களிப்பில் புதிய நிபந்தனைக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் வட்டாரப் பங்குகளின் விலை குறைந்தது அதற்குக் காரணம்.இதனிடையே,கிரீஸ் நாட்டின் நிதி அமைச்சர் பதவி விலகி புதிய நிதி அமைச்சராக யூக்ளிட் ட்சகலோடோஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஶ்ரீ டத்தோ நஜிப் துன் ரசாக்ஜ் மீதான குற்றச்சாட்டு நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அந்தக் குற்றச்சாட்டு ஓர் அரசியல் சதி என்று கூறி பிரதமர் நஜீப் துன் ரசாக் நிரகரித்து வருகிரார்.இருப்பினும் அந்த விவகாரத்தில் பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும்வரை மலேசியா மீது முதலீட்டாளர் நம்பிக்கை திரும்பாது என்று நிதி வல்லுநர்கள் கூறுகின்றனர்-Vanakam Malaysia.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here