15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் நாவற்குழியில் கைது!

0
264

15 வயது சிறுமியை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று நாவற்குழியில் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவரின் மகளும் இவருடனே வசித்து வந்தார். சிறுமியின் தாயாருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.அந்த நபர் குறித்த சிறுமியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியதுடன் சிறுமியை பல நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அறிந்த சாவகச்சேரிப் பொலிஸார் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை கைது செய்தனர். அத்துடன் அவரை சிறுவர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •