ஏவுகனை, நீ யாரென்று எனக்கு தெரியும்!

0
461

ஏவுகனை என்ற பகுதியில் தமிழ்ப்பத்திரிக்கை ஒன்றின் வழி மலேசிய கல்வி அமைச்சையும் கல்வித் துணை அமைச்சரையும் நேரடியாக குற்றம் சாட்டிக் எழுதிக் கொண்டிருப்பது ஒரு அரசாங்க ஊழியர் என்பது தெரிந்துவிட்டது. ஒரு அரசாங்க ஊழியராக இருந்து கொண்டு அரசாங்கத்தையும், அரசு சார்ந்த இயக்கங்களையும் நமது பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் விருப்பத்துக்கு தமிழ்ப்பத்திரிக்கையின் வழி சாடி வருகின்றார்.

புனைப்பெயர் “ஏவுகனை“என்ற பெயரினை வைத்துக்கொண்டு விருப்பத்துக்கு எழுதிக் கொண்டிருந்தாலும் யார் இந்த ஏவுகனையை இயக்குபவர் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. மக்களின் பிரதிநிதியாக இருந்து மக்களின் குறைகளை உலகத்துக்கு எடுத்துரைப்பதாக நினைத்துக் கொண்டு சில தனி நபர்களின் தூண்டுதலுக்கு இணங்க மலேசிய அரசாங்கத்தையே சாடிக்கொண்டிருக்கின்றார். இந்தியர்களின் எழுச்சிக்குறல் என்று குறிப்பிட்டு நல்லது செய்பவர்களையும் செய்யத் தூண்டாமல் ஆக்குவதுதான் இந்த ஏவுகனையின் வேலையாக இருக்கின்றது.

சரி, இந்த ஏவுகனையின் வழி நடந்த நல்ல காரியங்களையும் இந்த இந்திய அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு பள்ளிக்கூடங்களிலும், கல்வி நிலையிலும் நடந்த உருமாற்றங்களையும் துரித வளர்ச்சிகளையும் ஒரு பகுதியாக போட்டிருக்கலாம். அதையெல்லாம் செய்யவில்லை. அதனை விடுத்து இல்லாத ஒன்றையும், நடக்காத ஒரு பிரச்சனையும் உலகத்துக்கு காட்டுகிறேன் என்று தலைவர்களை நேரடியாக சாடுவதே இந்த ஏவுகனையின் வேலையாக இருக்கின்றது.

பேணாவும் வாய்ப்பும் இருக்கின்றது என்பதற்காக அரசாங்கத்தை சாடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்க ஊழியர் இதை மட்டும் செய்யவில்லை. இதை தவிர ஒரு அரசாங்க ஊழியர் செய்யக்கூடாத அனைத்து வியாபாரங்களையும் செய்துக்கொண்டிருக்கின்றார் என்பது தெரிய வந்துள்ளது. ஏவுகனையை இயக்கி ஆட்டத்தை தொடங்கிய இந்த அரசாங்க ஊழியரின் அனைத்து விவரங்களும் கூடிய விரைவில் ஒவ்வொக இந்த உலகத்து அம்பலப்படுத்தப்படவிருக்கின்றது. பேணாவை எடுத்து விட்டால் மட்டும் போதாது பயனுள்ளதை எழுதி மக்களுக்கு நன்மை கொடுக்க வேண்டும். இதை மறந்த தமிழ்ப்பத்திரிக்கைகளின் நிலையை சுட்டிக் காட்ட தயாராக இருக்கின்றோம். அதுமட்டுமின்றி அரசாங்கத்திடமே வேலை செய்து, அரசாங்கத்திடமிருந்தே சம்பளம் பெற்று, அரசாங்கத்தையே குறை கூறும் இவரது நிலை உண்ட விட்டுக்கு ரெண்டகம் செய்த கதையாகத்தான் இருக்கின்றது.

அன்புடன், ஏவுகணையை வீழ்த்த வந்த சாணக்கியன்

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •