மலேசிய தமிழுக்கு புற்றுநோய், வைத்தியம் செய்ய உதவி செய்யுங்கள் !

0
898

அன்மைய காலமாக கலப்பு தமிழ் ஊடுறுவல் நம் மலேசியா நாட்டில் மிக அதிமாக உள்ளது. தமிழ் நாட்டிலேயே தூயதமிழை தமிழ் மக்கள் பேசுவதில்லை ஆனால் நம் நாட்டில் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டிருகின்றது என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இதற்கும் ஓர் இடர்பாடு வந்துவிட்டது. ஆம் கலப்பு தமிழ் எனும் சமூக புற்று நோய் ! சில காலமாக தான் இந்த புற்றுநோய் தமிழ் பேசும் சமுகத்தை தாக்க ஆரம்பித்துள்ளது. இதனை வேரோடு கிள்ளி எரியாவிடில் நாளை கண்டிப்பாக மாசு படிந்த தமிழ் மொழியைதான் நாம் நடைமுறையில் பயன்படுத்துவோம். தமிழ் பற்று என்பது தமிழ்ப் பள்ளியில் படிக்கும் காலத்தோடு முடிந்து விடுகிறது ஒரு தமிழ் மாணவனுக்கு அதன் பிறகு தமிழ் மாற்றான் தாய்ப்பிள்ளையாக மாறிவிடுகிறது. இதுதான் நிலவிவரும் இன்றைய சூழ்நிலை.

524 தமிழ்ப்பள்ளிகள் இருப்பது நல்லது, பெருமைப்படகூடிய தகவல்தான் ஆனால் தமிழ் பற்றாளன் எண்ணிக்கை குறைந்து விட்டால் கண்டிப்பாக நாளை நம் தமிழ்ப்பள்ளிகள் காலியாகதான் இருக்கும். மாணவர்கள் இல்லாமல்! பேசும் தமிழ் சாதரண விஷயம்தான் இருப்பினும் அதுதான் அடிப்படை , தமிழின் பெருகத்திற்கும் வளர்ச்சிக்கும். தூயத்தமிழ் பேச சொல்லி கட்டாயப்படுத்தவில்லை,முடிந்தளவு பேச்சு தமிழிலாவது கலப்பு இல்லாமல் பேசலாம் அல்லவா? நல்ல பேச்சு தமிழ் பேசுவதற்கு நம் மக்கள் கூச்சப்படுகின்றனர், இன்னும் சிலர் கேவலமாக நினைக்கின்றனர். இதற்கு காரணம்தான் என்ன ? முடிவுகள் இல்லையா ?

மலேசிய நாட்டில் நடப்பு சூழ்நிலையே இதற்கு முதல் காரணம். அரசாங்கம் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் தமிழனுக்கு தமிழ் மீது உள்ள அக்கறை மறைந்து அலட்சிய போக்கு மிளிர்ந்து விட்டால் கண்டிப்பாக அழிவு என்பது நிச்சயம். தமிழ்ப்பள்ளி படிக்கும் படித்த மாணவர்களும் , போதிக்கும் ஆசிரியர்களும் மட்டுமே நல்ல தமிழ்ப் பேசினால் போதும் தமிழ் வாழ்ந்து விடும் என்று நினைப்பவரின் எண்ணத்தில் முதலில் மண்ணல்லி போட வேண்டும். மொழிப் பற்று இல்லாத சில சுயநல புல்லுறுவிகளின் இம்மாதிரியான செயல்களினாலே தமிழ் மொழி கரைந்து மறைந்து கொண்டிருக்கின்றது. அதாவது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலந்து பேசுவதைதான் இங்கு கலப்பு தமிழ் என்று குறிப்பிடுகின்றேன். கலப்பு தமிழ் உபயோகம் கண்டிபாக மொழி அழிவுக்கு வழிவகுகிறது !

மொழியை வாழ்விப்பதில் தகவல் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றது. ஆம், பேச்சு மற்றும் மொழி வளம் இவைகளின் மூலம் வளர்ச்சி அடைக்கிறது. தற்ப்போது தமிழ்ப்பத்திரிக்கை மற்றும் நாளிதழ்கள் இன்னும் இந்த கலப்பு தமிழ்ப் புற்று நோயால் பாதிக்கப்படவில்லை. சுத்தமாக இருக்கின்றது மற்றும் நல்ல தமிழை வளர்த்து கொண்டிருகின்றது. ஆனால் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளி,ஓலி அலைகள் முற்றாக இப்புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குதான் நாம் வைத்தியம் காணவேண்டும்.

மலேசியாலேயே முதல் நிலை தமிழ் வானொலி என்று பறைசாற்றி கொண்டிருக்கும் ஒலி அலைக்கு முதலில் வைத்தியம் தேவை ! உங்களை குறைக்கூறுவது நோக்கமல்ல , திருத்துவதே அடிப்படை எண்ணம். கலப்பு தமிழ் மிக அதிகமாக இந்த தமிழ் ஒலி அலையில்தான் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. கலப்பு தமிழ் இங்கு வியாபார தமிழாக உபயோகிக்கப்படுகிறது. கலப்பு தமிழ் உபயோகித்தால்தான் எங்களின் இரசிகர்களுக்கு பிடிக்கும் அப்போழுதுதான் நிறையப்பேர் கேட்பார்கள் , நாங்களும் தனித்து பெயர்பதிப்போம் என்று குறுகிய சிந்தனை கொண்ட மேல்மட்ட அதிகாரிகளின் அலட்சிய எண்ணம்தான் இத்தனைக்கும் காரணம். அறிவிப்பாளர்களை குறைக்கூறி என்ன பயன் , அவர்களை அப்படி பேச உற்சாகம் கொடுக்கும் மேல்மட்ட அதிகாரிகளை அல்லவா நாம் உமிழ வேண்டும் ! பணத்திற்க்காக, வியாபாரம் என்ற நோக்கத்திற்க்காக கலப்பு தமிழ் என்னும் புற்று நோயை கொண்டு வந்த புகழ் கண்டிபாக இந்த “ மலேசியாவிலேயே முதல் நிலை தமிழ் வானொலி என்று பறைசாற்றி கொண்டிருக்கும் ஒலி அலையையே சாரும்”. வாழ்க உங்கள் வியாபார தமிழ் சேவை. மரபு தமிழ் பேச சொல்லி கேட்கவில்லை வெறும் சுத்தமான கலப்பில்லா தமிழைத்தான் பேச சொல்லி கேட்கிறோம். அதிகாரம் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் நினைத்தால் கண்டிப்பாக இதனை செயல் படுத்த முடியும். ஆனால் இவர்கள் இதனை பரிந்துறைப்பதிலலை, வியாபார யுக்தி என்ற பெயரில் இவர்கள் நடத்து கபட நாடகம். எட்டப்பன் மறந்தாலும் அவனுடைய குணாதிசயங்கள் இவர்களைப்போன்றோர் மத்தியில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருகின்றது என்று உணருகின்றேன்.

கேள்விகள் எழுப்பினால் பொருட்படுத்துவதில்லை, காரணம் நாங்கள் தனியார் நிறுவனம் என்ற இருமாப்பு. அதற்கும் மேல் கேள்வி  கேட்டால் குற்றவாளியாக முத்திரை குத்தி அவர்களுக்கு ஊடக ரீதியாக எந்தவொரு விளம்பரமும் வாய்ப்புகளும் வழங்காமல் செய்யும் யுக்தியை பயன்படுத்துவது பழக்கபட்டு போய்விட்டது. பேசும் வாயை அடைக்க இப்படியும் வழிகள் கையாளப்படுகிறது. மலேசிய மக்கள் இதனை பொருட்படுதுவதில்லை காரணம் இது ஒரு பொழுது போக்கு ஒலி அலைதானே என்ற எண்ணம். முக்கால்வாசி இளம் வட்டங்கள் இந்த ஒலி அலையை அன்றாடம் கேட்கின்றனர். நாளை தமிழை வாழ்விக்கும் இளம் தலைமுறையினரிடம் கலப்பு தமிழ் உபயோகத்தை அதிக படுத்தி வருகின்றனர் இவ்வொலி அலையினர். இன்று குரல் கொடுத்து இதற்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் கண்டிப்பாக நாளை நாம் வருத்தப்படுவோம் ! புண்ணை சொரிய சொரிய சுகமாகத்தன் இருக்கும், சொரிந்த பிறகுதான் தெரியும் அதன் இரணவேதனை. இன்று இவர்கள் சொல்லும் காரணத்திற்கு பூம் பூம் மாடுபோல் தலையாட்டி கொண்டு தொடர்ந்து இவர்கள் செய்யும் செயலுக்கு துணைப்போகும் நண்பர்களே….சிந்தித்து பாருங்கள் ! தமிழ்ப்பள்ளிக்கு புத்தகம் சேகரித்து கொடுப்பது பாரட்டுகுரிய செயல் வாழ்த்துக்கள் ஆனால் கலப்பு தமிழ் பேசி தமிழுக்கு பாலூற்றி கொண்டிருக்கும் செயல் சரியோ? தைப்பூசத்திற்கு பிறகு தமிழ் கடவுள் ஆலய வளாகத்தை சுத்தம் செய்ய நீங்கள் எடுத்து கொள்ளும் முயற்சி பாரட்டுகுரியது….ஆனால் உங்கள் கலப்பு தமிழ் புலக்கத்தை முதலில் சுத்தம் செய்ய தவறிவிட்டீர்களே !  மலேசியாவிலேயே முதல் நிலை தமிழ் வானொலி என்று பறைசாற்றி கொள்ளும் உங்கள் வானொலி அலைவரிசையின் அகப்பக்கதில் தமிழ் மொழியைக் காணவில்லையே ? அங்கேயும் நம் மொழிக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீங்கள் வெறும் வியாபார அடிப்படையில் மட்டுமே முதல் நிலை கலப்பு தமிழ் மொழி பேசும் வானொலி என்பதுதான் உண்மை. நீங்கள் பேசும் தமிழில் கூட உருப்படியாக மொழியை உச்சரிப்பதில்லை. அதிகமான ஆங்கில வார்த்தைகள் கலப்பு. வெளிநாட்டு மோகம் பிடித்து விட்டது இவர்களுக்கு. நவீன உலகத்தையும் இளைய சமுகத்தையும் காரணம் காட்டி தப்பி கொள்ள நினைக்காதீர்கள்.மலேசியாவில் மொத்தம் இரண்டு வானொலி ஒலி அலைகள்தாம், அதில் நீங்கள் உருப்படியான தமிழை பயன்படுத்தினால் கண்டிப்பாக இளையோர்கள் மற்றும் அனைவரும் பின்பற்றுவர். உதாரணத்திற்கு நமது அண்டை நாடான சிங்கப்பூரை எடுத்த்துக்கொள்வோம், அவர்கள் நல்ல பேச்சு தமிழை வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைகின்றதே. மனமிருந்தால் மார்கமுண்டு. தமிழ் சிரழிந்தால் என்ன ? உங்களுக்கு அதிக நேயர்கள் கேட்க வேண்டும் , அதிக வசூல் ஆக வேண்டும்…அவ்வளவுதானே ! கலப்பு தமிழ் புலக்கம் புற்றுநோய் போல் பரவிக்கொண்டிருக்கின்றது, பொழுது போக்கான பேச்சு வார்த்தைகள் கண்டிப்பாக நல்ல தமிழை  நம் சந்த்தியினரிடமிருந்து அழித்திடும்.

எனக்கென்ன கேடு என்று விட்டு செல்ல மனமில்லை, புரட்சி செய்ய நான் மகாத்மா காந்தியடிகளும் இல்லை! இருக்கும் நல்ல தமிழை இன்னும் வாழ்விக்க விரும்பும் ஒரு தமிழ் மகனின் தனிப்பட்ட மொழி வளர்ச்சிக்கான கருத்து. கலப்பு தமிழ் பேசி தமிழ் தாயை முச்சந்தியில் விட்டு விடாதீர்கள். இன்று நீங்கள் மொழி வளர்ச்சிக்கும் எடுக்கும் முயற்சி கணடிப்பாக நாளை தமிழ் இம்மண்ணில் நிலைத்திட அடித்தளமாய் அமையும். தமிழை தாயாக நினைக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் இந்த குமுறல் கண்டிப்பாக புரியும். குறல் கொடுப்பீர் தமிழர்களே !

தயவு செய்து தமிழை இம்மண்ணில் வாழவிடுங்கள். இதை ஒரு அன்பு வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலப்பு தமிழ் வேண்டாம் மாற்றிகொள்ளுங்கள் ! தமிழை வாழவிடுங்கள் ! தமிழுக்கு தமிழந்தான் குழித்தோண்டுகிறான் மாற்றான் அல்ல…

வாழ்க தமிழ், வளர்க தமிழர் !

இப்படிக்கு உதவி கோருபவர்

கிருஷ்ண மூர்த்தி முனியாண்டி

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •