புது டில்லியில் ‘NESTLE’ நிறுவனத்தின் “MAGGIE NOODLES” உணவுப் பண்டம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது

0
607

புது டில்லியில் மேகி நுாடுல்ஸ்” உணவு பண்டத்தை விளம்பரப்படுத்திய பிரபல நட்சத்திரங்கள், நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீது விரைவில் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ள, ‘நெஸ்லே நிறுவனத்தின், மேகி நுாடுல்ஸ் விவகாரத்தால், பாலிவுட் நட்சத்திரங்கள், நொந்து, நுாடுல்ஸ் ஆகி வருகின்றனர்.உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் விற்கப்பட்ட, மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை கடந்த மாதம் ஆய்வு செய்த போது, அவற்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., எனப்படும் மோனோ சோடியம் குளுடமேட் என்ற ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.

ஆனால், மேகி பாக்கெட்டுகளில், ‘எம்.எஸ்.ஜி., பயன்படுத்தப்படவில்லை’ என, தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகமாக சாப்பிட்டால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என கூறப்படும், எம்.எஸ்.ஜி., ரசாயனம், மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து, நாடு முழுவதும் அந்த உணவுப் பண்டம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அவற்றின் சோதனை முடிவுகளை, மத்திய அரசு கேட்டுள்ளது. இன்னும் இரண்டொரு நாட்களில் அந்த முடிவுகள், மத்திய அரசை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக, நுகர்வோர் விவகாரத் துறை கூடுதல் செயலர் குருசரண் நேற்று கூறினார்.அந்த முடிவுகளின் படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

“மேகி  நுாடுல்ஸ்” விளம்பரங்களில் நடித்த சினிமா நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்ட போது, ”அவர்களின் விளம்பரங்கள் தவறாக இருக்குமானால், நட்சத்திரங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.இதனால், “மேகி நுாடுல்ஸ்” விளம்பர படங்களில் நடித்த, அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகிய சினிமா நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப் படுகிறது

– Dinamalar.com

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •