தமிழ்ச் செய்தி பார்ப்போரின் எண்ணிக்கை சரிந்துவிட்டதா ?

0
914

மலேசிய இந்தியர்களுக்கென சிறப்பாக தொலைக்காட்சி செய்தி RTM TV2 ஒளி அலையில் முதன்முதலாக ஒளிப்பரப்பட்டது. மலேசிய நாட்டில் இந்தியர்கள் நாட்டு நடப்புகளையும் தகவல்களையும் அறிந்து கொள்ள அரசாங்கம் உருவாக்கிய தளமே இவ்வாய்ப்பு.தேசிய ரீதியில் சமூகம், அரசியல்,பொது தகவல் போன்ற அடிப்படையில் இச்செய்தி பிரிவு செயலாற்றி வருகின்றன. மக்கள் தங்களின் தாய்மொழியிலே தகவலை தெரிந்துக்கொண்டு தகவல் அறிந்த சமூகமாக உருப்பெற இத்தமிழ் செய்தி ஒரு கருவியாக அமைந்தது இத்துனை காலம். இதனை தொடர்ந்து , ஒரு சில காலத்திற்கு மழைக்கு பூத்த காளான் போல் மலர்ந்தது ASTRO வானவில்லின் வர்த்தக தமிழ்ச்செய்தி. ஆனால் இது நிலைக்கவில்லை. ஒரிரு காலத்திலேயே இது முடக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் BERNAMA தமிழ்ச்செய்தி ASTRO 502 அலைவரிசையில், RTM TV2- யோடு இணைக்கொடுத்து தாய்மொழியில் செய்திகளை வழங்கி கொண்டிருந்தன. ஆனால் அதற்கும் இன்று இடர்ப்பாடு வந்து நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கு மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்ப்பட்டு தமிழ்ப்பத்திரிக்கையிலும் இணையத்திலும் மீண்டும் BERNAMA தமிழ்ச்செய்தி தொடர வேண்டும் என்று குமுறியுள்ளனர். அதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் துணைக்கொண்டு குரல் எழுப்பியுள்ளனர். தமிழ்ச்செய்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு பாரட்டுகள் உரிதாகும். ஆனால் தற்ப்போதைய காலத்தில் எத்தனை பேர் தமிழ் செய்தி பார்கிறார்கள் ? அதில் இளையோர்கள் எத்தனை சதவிகிதம் அடங்குவர் ? இதற்கு முதலில் நாம் பதில் காண்பது அவசியமாகும். தமிழ் மீது பற்றுக்கொண்டவர்கள், ஆசிரியர்கள், சில பெற்றோர்கள், சில சமுகவாதிகள், தங்களின் வீட்டில் ASTRO வசதியில்லாதவர்கள் பெரும்பாலும் RTM TV2 ஒளி அலையில் ஒளிப்பரப்பபடும் செய்திகளை பார்க்கின்றனர். சிலர் தங்களின் நிகழ்ச்சிகள் செய்தி பிரிவில் ஒளிப்பரப்படுவதை பார்ப்பதற்கு மட்டுமே தமிழ்ச்செய்தியை பார்கிறார்கள். இதுதான் உண்மை, நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கசக்கும் விடையமாகும்.

முன்புபோல் இல்லை நம் மக்கள். இளையோர்கள் தமிழ்ச்செய்தி பார்ப்பது குறைந்து விட்டது என்று ஆணித்தரமாக கூறலாம். சரி, தாய்மார்களாவது நமக்கென சிறப்பாக வழங்கப்படும் தாய்மொழியிலான செய்தியை பார்ப்பார்கள் என்று பார்த்தால், அதுவுமில்லை ! ஏன் என்று எட்டிப்பார்த்தால் தாய்மார்கள்தான்  தமிழ்ச்செய்தி ஒளிப்பரப்பும் நேரத்தில் தொடர்நாடக மயக்கத்தில் மூழ்கி கிடக்கின்றனறே ! ஆம், ASTRO SUN TV –யில் இடைவிடாத தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட தொடர்நாடகங்கள். தொடர்நாடக போதையில் மங்கிவிட்டனர் நம் மலேசியர்கள்.

தொடர்நாடகம் ஒளிப்பரப்பபடுவதும் அதைப் பார்பதையும் தப்பு என்று கூறவில்லை. ஆனால் அதுவே நம் அடிப்படையை மாற்றி அமைக்கும் சாத்தியம் கொண்டதாய் அமையும் பொழுது அது கண்டிபாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். வெளிநாட்டு மோகத்தில் மூழ்கிவிட்டனர் நம் மலேசிய மக்கள். அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு செய்திகளை பார்ப்பவர்களை விட வெளிநாட்டு அதாவது இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்படும் SUN NEWS பார்பவர்களின் கோஷ்டி அதிகரித்துவிட்டது. இதற்கு கண்டிப்பாக மக்கள் காரணமாக இருக்க முடியாது. கட்டுகின்ற பணத்திற்கு வாரி வாரி வெளிநாட்டு நிகழ்ச்சிககளை அள்ளி திணிக்கின்றது தனியார் ஒளி அலை. தனியார் ஒளி அலையை குறைகூறி என்ன பயன். சிந்திக்க வேண்டியவர்கள் அல்லவா இதனை பொருட்ப்படுத்த வேண்டும். சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் அல்லவா இதனைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். மலேசியாவின் நடப்பு செய்திகளை அறியா மக்கள் அதிகரித்து வருகின்றனர்.

வாழுக்கின்றன நாட்டில் நடக்கும் அன்றாடைய தகவல்களையும் செய்திகளையும் அறியா மக்கள் கண்டிப்பாக நாளைடைவில் நாட்டுப்பற்று மறைந்து போகும் சூழ்நிலைக்கு ஆளாகுவர். உள்நாட்டு தகவல் மற்றும் தமிழ்ச்செய்திகளை கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை நம் இந்தியர்கள். இதற்கு தனியார் நிறுவன ஒளி அலையின் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் அதிக அளவில் தருவிக்கப்படுவது ஒரு காரணம். தாய்மொழியிலான தமிழ்ச்செய்தி இனி தொடருமா ? தமிழ்ச்செய்தி பார்ப்போரின் எண்ணிக்கை மேலும் சரிந்துபோகுமா? இதற்க்கெல்லாம் நாம்தான் விடை காண வேண்டும். தமிழ் பற்று கொண்டு போராட்ட குரல் கொடுத்தால் மட்டும் போதாது, அடிப்படை பிரச்சனைகளை முதலில் ஆராய வேண்டும் அதனை சரி செய்ய வேண்டும். தகவல் தெரிந்த சமுதாயமாக உருப்பெற தமிழ்ச்செய்தியும் ஒரு பகுதியாகும் நம் இந்திய மக்களுக்கு. தூரநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் கண்டிபாக இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும். தகவல் ஊடக அமைச்சின் பார்வைக்கு இந்த பிரச்சனை முறையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும். நம் சமுதாயம் நம் கடமை. உணருங்கள் உணர்த்துங்கள் !

ஆக்கம் ,

கிருஷ்ண மூர்த்தி முனியாண்டி

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •