டி.ஒய்.சி.சி – சி.எப்.ஐ 7 வது அனைத்துலக 20-20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி! டத்தோ எம்.சரவணன் தொடக்கி வைத்தார். டத்தோ டி.மோகன் சிறப்பு வருகை! பரிசளிப்பு விழாவில் ஜே.எம்.ஆரூண்.

0
640

டி.ஒய்.சி.சி – சி.எப்.ஐ 7 வது அனைத்துலக 20-20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி!
டத்தோ எம்.சரவணன் தொடக்கி வைத்தார். டத்தோ டி.மோகன் சிறப்பு வருகை!
பரிசளிப்பு விழாவில் ஜே.எம்.ஆரூண்.
கின்றாரா ஆக 20 –
இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு (சி.எப்.ஐ), இளைஞர் கிரிக்கெட் கழகத்தோடு (டி.ஒய்.சி.சி) இணைந்து நடத்திய 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான 7 வது அனைத்துலக 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார். மலேசிய இந்தியர் விளையாட்டு, கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு தேனி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம் ஆரூண் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கின்றாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் இலங்கை அணி நேபாள அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த டத்தோ எம்.சரவணன், மற்றும் சிறப்பு வருகை புரிந்திருந்த டத்தோ டி.மோகன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பின் செயல்பாடுகளையும், மலேசிய கிரிக்கெட் சங்கத்துடனான நட்பையும் வெகுவாக பாராட்டினார்கள்.
சமுதாய விளையாட்டுத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் டத்தோ எம்.சரவணன், டத்தோ டி.மோகன் ஆகியோருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில் மலேசியாவை பொறுத்த வரையில் அனைத்து ரீதியிலும் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
6 அனைத்துலக அணிகள், மற்றும் 2 உள்ளூர் அணிகள் பங்கெடுத்த இந்த போட்டிகளில் இலங்கை அணி வெற்றி வாகை சூடிய நிலையில் தமிழ்நாடு தேனி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஜே.எம்.ஆரூண் அவர்கள் வெற்றிக்கோப்பையை எடுத்து வழங்கினார். இந்த போட்டிகளின் ஆரம்ப விழாவில் இந்திய அரசாங்கத்த்தின் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பின் ஆணையத்தலைவருமாகிய அனுமந்தர ராவ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பும், மலேசிய கிரிக்கெட் சங்கமும் இணைந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றவிருக்கிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here