கமலநாதனின் தலையீட்டால் தர்ஷினிக்கு மேற்க்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டியது

0
555

SPM தேர்வில் 10A-க்கள் பெற்ற மாணவி தர்ஷினிக்கு மேற்க்கல்வி வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட தகவலை அறிந்தவுடனே அதிரடி நடவடிக்கை மேற்க்கொண்டு அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டார் துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன். ரவாங் வட்டாரத்தை சேர்ந்த இம்மாணவியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வாய்ப்பு கிடைக்கப்பெற்ற தகவலை அம்மாணவின் பெற்றோடு பகிர்ந்து கொண்டார் கமலநாதன். இதனை ஒரு சிறு பிரச்சனை என்று விட்டு விடாமல் தானே நேரடியாக களத்தில் இறங்கி மாணவி தர்ஷினிக்கு வேண்டிய வாய்ப்புதனை கிடைக்க செய்தார். சில தொழில்நுட்ப கோளாரினால் ஏற்ப்பட்ட இப்பிரச்சினை போன்று மீண்டும் மற்ற மாணவர் பாதிப்புறாமல் இருக்க கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இப்பிரச்சனை மேலும் சர்ச்சையாகமலிருக்க தகுந்த நேரத்தில் உடனடியாக தீர்வு கண்ட துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் அவர்களுக்கு நன்றிகள் உரிதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here