என் தந்தையின் கனவு

0
1045

….……….மணி அடித்தது மாணவர்கள் அனைவரும் சொல்லாமலேயே புத்தகங்களை புத்தகப்பைக்குள் எடுத்து வைக்கத் தொடங்கினர். நானும் எனது பாடத்தை முடித்துக் கொண்டு மாணவர்களை வீட்டுக்கு அணுப்பினேன். விரைவாக எனது பேச்சை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு சென்று பாஞ்ச் காட்டை அடித்து விட்டு காரை நோக்கி நடந்தேன்..

ஒரு பெரியவர் ‘ஐயா நீ கங்காணி மகன் குமாருதானையா?” என்று கார் கதவைத் திறக்கும் போது கேட்டார்..

நான் பதில்கொடுக்கும் முன்னரே “ஐயா என்ன கொஞ்சம் தெரு முனையிலுள்ள பரமசிவம் வங்கசா கடையில இறக்கி விட்டரியா” என்று முடித்தார். நான் சிரித்த முகத்தோடு “சரி வாங்க” என்று முடித்தேன்.

காரினுள் அமர்ந்த அந்த பெரியவர் “ நான் இங்கதான் ஐயா பொறந்து வளர்ந்தேன்.. உன் அப்பாவும் நானும் சினேகிதர்கள்..  இப்போ என் புள்ள வீட்டுல கிள்ளான்ல இருகிறேன். எப்போனாசும் இங்க வந்து போவது வழக்கம்.. இன்னைக்கு பஸ்சு இங்கயே இறக்கி விட்டுருச்சி… நல்ல வேல உன்ன பார்த இல்லானா டக்சிக்கு ரும்ப நேரமா காத்துக் கிடக்கனும்” என்று இடைவிடாது அவரது கதயை சொல்லி முடித்தார்.

நான் வேறு ஏதும் அவரிடம் கேட்கவில்லை. என் தந்தை நான் ஏழு வயது இருக்கும் போதெ இறந்துவிட்டார்.

“பரவாயில்லையா கங்காணி பேர காப்பாத்த நீ ஒருத்தனாவது வாத்தியாரு வேலைக்கு பொயிட்ட…. உங்க அப்பா எப்பவும் சொல்லுவாரு… குமாரு எப்படினாசும் வந்துருவானு…. அதெ நனவாக்கிட்டப்பா” என்று முடிப்பதற்குள் எனது தந்தையின் உருவம் என் கண்முன் வந்து வந்து மறந்தது.

என் தந்தை பாடங் பெசார் எஸ்டேட்டின் கங்காணி…பெர்தாக எதுவும் படிக்கவில்லை. அவரிடம் நான் கற்றுக் கொண்ட முதல் பழக்கம் ஒவ்வொரு நாளும் நாளித்ழை படித்து முடிக்க வேண்டும் …எனக்கு படிக்க தெரியாத போதிலிருந்து நாளிதழில் உள்ள செய்திகளை படித்து அதனை என்னிடம் சொல்வது வழக்கம்.

வீட்டின் ஐந்தடியில் உள்ள பிராஞ்சாவில்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு நாட்டு நடப்பினை பற்றி கூறுவார் என் தந்தை.

என் உடன்பிறப்புகள் மொத்தம் பத்து பேர். நான் கடைக்குட்டி என்பதனால் தந்தயின் பாசம் கொஞ்சம் அதிகம்.. எடுத்த்துக்கெல்லாம் குமாருதான் அப்பாவின் வாயில் வரும்.. சில சமயங்களில் இது எனக்கு சலிப்பையும் தட்டியுள்ளது.

மீண்டும் அந்த பெரியவர் “ஒரு நாளுயா உனக்கு 5 வயசு இருக்கும் அப்பொ உங்க பாட்டி மூங்கில் குச்சிய சீவிகிட்டு இருந்தப்போ அது தவறி உன் கண்ணுல பட்டுருச்சி…. அது ஒரு பெரிய ஆபத்துல போய் விடும்னு யாருமே எதிர்பார்கலப்பா… உன் கண்ணுல கருப்பு விழியில பாதிப்பை ஏற்படுத்தி ஏதொ பெரிய ஆப்பரெஷன்லா நடந்தது.. அப்பொவே கோலாலம்ம்பூர் ஆஸ்பத்திரியிலத்த்தான் உன்ன வச்சிருந்தாங்க” கூறும் பொழுதே என் தந்தை பெற்ற வேதனையை என்னால் ஒரு தந்தையாக இன்று உணர முடிகின்றது.

அன்று நடந்த சம்பவம் மீண்டும் என் கண் முன்னே தோன்றியது. எல்லா பரிசோதனையையும் செய்து விட்டனர்… எந்த பரிசோதனையும் என் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. என் இடது கண் முழுமையாக வெள்ளையாகிவிட்டதை இடது கண்ணின் வழி கண்ணாடி முன் நின்று  பார்க்க முடிந்தது. என்னால் அப்பொழுது எந்த வேதணையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.. எதற்குமே களங்காத என் தந்தை கண்கலங்கி நின்றார். எத்தனையோ ம்ருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி விட்டார்… எதுவும் தீரவில்லை..

திடீரென்று வெளிநாட்டிலிருந்து 3 கண்கள் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவை மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளதாக செய்தியின் மூலம் அறிந்த என் தந்தை.. அது சம்பந்தமான மருத்துவரை உடனடியாக சென்று பார்த்தார். அதிஷ்டவசமாக இரண்டு கண்களுக்கு மட்டுமே ஆள் இருப்பதாகவும் மீதமுள்ள ஒரு கண்ணை எனக்கு பொருத்துவதாகவும் அந்த மருத்துவர் உறுதியளித்தார்.

அன்று ஒரு கண் பார்வையில் என் தந்தையின் மகிழ்ச்சியை பார்த்தேன். பல இன்னல்களுக்கு பிறகு எனக்கு கண் பார்வையும் வந்தது. அன்று என் தந்தை பெரிய அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் “டேய் ஐயா உன் தம்பி கண் பார்வைக்காக ரொம்ப கஷ்டப்பட்டுருக்கான்டா…  நான் இல்லனாலும் இருக்கரத வச்சி எப்படினாச்சும் இவன படிக்க வெச்சிருய்யா” என்று கூறிய போது நான் கண்டிப்பாக என் தந்தையை சாதனையாளனாக்க வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. கண்களில் என்னை அறியாமலேயே ஒரு நீர் தேக்கம்.  அவர் மீண்டும் “ஐயா உங்க அப்பா இல்லனாலும் நீ அவரோட கணவுகளை நினவாக்கி அவர சாதனையாளனாக்கிட்டப்பா,

அந்த முச்சந்தி வந்திருச்சினு நினைக்கறேன், நான் இங்கயே இறங்கிகிறேம்பா” என்று காரை நிருத்தச் சொன்னார்.. காரை நிருத்திவிட்டு வீட்டை நோக்கி விரைந்தேன்.. பேக்கை மேசையின் மீது வைத்து கைகளை கழுவினேன்…

என் மணைவி “என்னங்க நாளைக்கு உங்க அப்பாவோட நினைவு நாள் எப்பொழுதும் போல ஆதரவற்ற பிள்ளைகளுக்கு மதிய உணவு தயார் படுத்த சொல்லிடட்டுமா?” என்றாள்..

சிரித்த முகத்தோடு “தலையை ஆட்டினேன்…… என் தந்தையின் புகைப்படம் கம்பீரமாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது….

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •