அரை அவியல் முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும் !

0
681

நாம் சாப்பிடும் கோழி முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொரித்த முட்டையை காட்டிலும் அரை அவியல் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.

ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மிகிராம் உள்ளது. ஆனால் நாம் தினசரி 300 மிகிராம் அளவு கொலஸ்டரோலை மட்டுமே உணவில் இருந்து பெற வேண்டும் என அமெரிக்க இருதயச் சங்கம் பல வருடங்களுக்கு முன்னரே அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றத்தையும் மீள அறிவித்ததாகத் தகவல் இல்லை. எனவே ஆரோக்கியமான ஒருவர் நாளாந்தம் ஒரு முட்டை சாப்பிடுவதில் தவறில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கொலஸ்டரோல் இரத்தத்தில் அதிகமாக உள்ளவர்களும் மாரடைப்பு வந்தவர்களும் அது வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களும் தமது கொலஸ்டரோல் அளவுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் வாரத்திற்கு எத்தனை முட்டை எனத் தீர்மானிப்பது நல்லது. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவு வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். நாம், பொறித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here