அகப்பக்கம் தடைசெய்யப்பட்டாலும் தொடர்ந்து உண்மையை வெளியிடுவோம்- தி சரவாக் போஸ்ட்

0
634

சிங்கப்பூர், 20 ஜூலை- நாட்டின் நிலைத்தன்மையை பாதிப்பதாகக் கூறி தங்கள் அகப்பக்கத்தை தடை செய்தாலும், 1MDB விவகாரம் பற்றி தங்களுக்குத் தெரிந்த விபரங்களைத் தொடர்ந்து வெளியிடுவோம் என தி சரவால் ரிப்போர்ட் அகப்பக்கம் சூளுரைத்துள்ளது.1MDB மீதான குற்றஞ்சாட்டுகளைக் கொண்ட தகவல் களஞ்சியமாக திகழும் தி சரவாக் ரிப்போர்ட் அகப்பக்கம், 1MDB பற்றிய பல செய்திகளைக் வெளியிட்டு வந்தது, குறிப்பிடத்தக்கது.தி சரவாக் ரிப்போர்ட் அகப்பக்கம் நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தின் அடிப்படையில், மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் தடை விதித்தது.அவ்வாணையம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கருத்துரைத்த சரவாக் ரிப்போர்ட் தலைமை செய்தியாளர், Clare Rewcastle Brown, MCMC-யின் நடவடிக்கையால்தங்கள் பத்திரிகை பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.  நேற்று, ஞாயிற்றுக்கிழமை அதன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த தடை மூலம், உண்மையை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என அந்த அகப்பக்கம் தெரிவித்துள்ளது.முன்னதாக, 1MDB நிறுவனத்திலிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட் பிரதமரின் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது. -VANAKAM MALAYSIA

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •