Wombat விளம்பரம் அகற்றப்படுகிறது-DBKL அறிவிப்பு

0
145

பெட்டாலிங் ஜெயா, 6 ஜூலை- தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் பன்றியைப் போல் தோற்றமளித்த ஒரு மின்சார விளம்பரப் பலகை சர்ச்சை காரணமாக தற்காலிகமாக அகற்றப்படுவதாக DBKL தெரிவித்துள்ளது.தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை அகற்றப்பட்டதை உறுதிபடுத்திய மாநகர மன்ற மேயர் டத்தோ அஹ்மாட் பெசால் தாலிப், இது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கோரப்படும் என தெரிவித்துள்ளார்.

பன்றி என கருதப்பட்ட அந்த விளம்பரப் பலகையில் வரும் விலங்கு, உண்மையில் Wombat என அவர் தெரிவித்தார். Wombat கங்காருவைப் போல, கோலா கரடிகளைப் போல ஒரு விலங்காகும். “அதை பன்றி எனக்கருதி, பொதுமக்களிடையே தேவையற்ற வதந்திகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய நபர் ஒரு பொறுப்பற்றவர்” என டத்தோ அஹ்மாட் பெஷால் ஒரு நேர்க்காணலில் தெரிவித்தார்.

 பன்றி ஒன்று, மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை அணிந்து, நோன்பு பெருநாள் வாழ்த்துக்கூறுவது போன்ற ஒரு புகைப்படம்  சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதோடு, பல்வேறு விமர்சனங்களையும் எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பின்னர் தான், ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு மற்ற நாடுகளில் துணை நிறுவனங்களை நடத்தி வரும் Servecorp நிறுவனத்தின் விளம்பரப் பலகை என தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here