விண்கல் தாக்கும் அபாயம் – மீண்டும் சுனாமி எச்சரிக்கை

0
283

லண்டன்: மிகப்பெரிய விண்கல் விழும் அபாயம் , இங்கிலாந்து கடல் பகுதி வட்டாரத்தில் நிகழவுள்ளதாகவும் தொடர்ந்து  அந்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் பாதிகப்படும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹாப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மீது மோதக் கூடிய விண்கற்களின் ஓடு பாதைகளை ஆராய்ந்து வருகின்றனர். ஆராய்ச்சி முடிவில், இங்கிலாந்தின் கடல் பகுதியில் சில ஆண்டுகளில் பெரிய விண்கல் விழும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், இங்கிலாந்தில் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த பல்கலை விஞ்ஞானிகள் “ஆர்மர்’ எனும் சாப்ட்வேரை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் விண்கற்களால் பூமியில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் அறிய முடியும்.

நாள் தோறும் பூமியின் மேற்பரப்பில் சிறிய அளவிலான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அளவில் பெரிய, அதாவது சிறிய குன்று அளவிற்கு விண்கற்கள் பூமியின் மீது மோதும்போது கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன. இது வரை 13,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 500 கற்கள் பூமியின் மீது விழும் வாய்ப்பு உள்ளது.

தற்போது இங்கிலாந்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கல், நேரிடையாக இங்கிலாந்தில் விழாது என்றாலும், இங்கிலாந்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். –  தினமலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here