ஷா அலாம் (Mytimes) – துணைக்கல்வி அமைச்சராக பதவியேற்றப்பிறகு கமலநாதன் தமிழ்ப்பள்ளிகளின் வள்ர்ச்சிக்கு மிக அதிக கவனம் செலுத்தி வருகிறார். ம.இ.கா வின் துணையோடு இவர் பள்ளிகளுக்கு கல்வி மானியங்கள், மற்றும் இதர உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். அந்த அடிப்படையில், தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான நிர்மானிப்பு பணியை இந்திய குத்தகையாள்ர்களே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர்  இந்தியர்கள்.அதற்கு செவிசாய்த்து உடனடியாக இந்தப் பரிந்துரையை கல்வி அமைச்சின் பார்வைக்கு கொண்டு சென்று, இந்தியர்களின் இக்கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டினார் கமலநாதன்.

அதிகாரப்பூர்வமாக இந்திய குத்தகையாளர்களுக்கு, தமிழ்ப்பள்ளி கட்டுமான பணியின் வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 39 தமிழ்ப்பள்ளி கட்டுமான நிர்மாணிப்பு குத்தகைப்பணிகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும். கொடுக்கபட்ட கடமையை முறையாகவும் சீராகவும் செய்து வருகின்றனர் இந்திய கட்டுமான குத்தகையாளர்கள். இதற்கு சான்று , இன்று நாம் பார்க்கக்கூடிய சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியாகும். 10 மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய நிர்மாணிப்பு பணி, ஒன்பதே மாதங்களின் மிக தரமான முறையில் விரைவாக கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் கொடுத்தப் பணியை செய்துமுடித்துள்ளனர் இவர்கள், இது பாராட்ட்கூடியதாகும்.

இந்த 39 தமிழ்ப்பள்ளி கட்டுமான நிர்மாணிப்பு பணிகளையும் தானே நேரடியாக சென்று கண்காணித்து வருவதாகவும், அதன் விவரங்களையும் அவ்வப்போது அறிந்து வருவதாகவும் கூறினார் கமநாதன். மொத்தம் 897 மாணவர்கள் இத்தமிழ்ப்பள்ளியில் பயிலுகிறார்கள், எனவே அவர்கள் பயிலுவதற்கு வசதியான முறையில் இக்கட்டட அமைப்பு அமைந்துள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் இப்புதிய கட்டத்தை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்த முடியும். சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியின் கட்டுமான நிர்மாணிப்பு பணி ஒரு நிறைவை அடைந்ததை பொருட்டு, ம.இ.கா தேசிய தலைவரோடு இந்த சிறப்பு கண்காணிப்பு வருகையை மேற்க்கொண்டுள்ளார் துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன்.

ஜனவரி மாத முதல் காலக்கட்டத்தில் இந்த நிர்மாணிப்பு பணியை கண்காணிக்க வந்திருந்தார் துணைக்கல்வி அமைச்சர், அதன் பிறகு இது அவரது இரண்டாம் வருகையாகும் இப்பள்ளிக்கு. கொடுக்கபட்ட வாக்குறுதியையும், கோரிக்கையும் கண்டிபாக அரசாங்கம் நிறைவேற்றும், அதற்கு துணைக்கல்வி அமைச்சர் மற்றும் சமுதாய தலைவர் என்ற முறையில் செயலாற்றுவேன் என்றார் அவர்.தனது முயற்சிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் ம.இ.கா தேசிய தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணிதின் வருகைக்கும் நன்றி தெரிவித்துகொண்டார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here