மாணவர் தலைமைத்துவம் சிறந்த சமுதாயத்தின் அடையாளம் – UPSI புதிய மாணவர் தலைவர் கருத்து

0
990

தஞ்ஞோங் மாலிம் (Mytimes) – 2015/16 ஆண்டிற்க்கான (UPSI) பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் தலைவராக வினோட் ஜீவானந்தன். அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (UPSI) இந்திய மாணவர்களின் பிரதிநியாக விளங்கி வருகின்றது (UPSI) கலாச்சார மன்றம்.பல்கலைக்கழத்தில் இந்தியர் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், பிரச்சனைகளைக் களையவும், மாணவர்களின் கல்வி மற்றும் இதர அடைவுநிலைகளை ஊக்குவித்து அதிகரிக்கவும் இந்த குழுமம் செயல்ப்பட்டு வருகிறது.

மாணவர் தலைமைத்துவம் சிறந்த சமுதாயத்தின் அடையாளம் என்ற அடிப்படை எண்ணத்தை மாணவர்கள் உணர்தல் அவசியம்.மாணவர் நினைத்தால் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பல நன்மைகளை செயல்ப்படுத்த முடியும்.சிறந்த  சமுதாயத்தின் அடையாளாம்தான் நாங்கள், எனவே எங்கள் செயல்பாடுகளும் சிறந்தே விளங்கும்.

அன்மையில் மாணவர்கள், பலகலைக்கழக தேர்வு எழுதவும், புதிய மாணவர்கள் வருகைக்கும் சிறப்பு பிராத்தனை வழிப்பாட்டினை தண்டாயுதபானி ஆலயத்தில் இக்கழகம் ஏற்று நடத்தியது. இன்னும் பலகலைக்கழக மாணவர்கள் பனுறும் பல நன்மை மிக்க நிகழ்ச்சிகளை இப்பல்கலைக்கழ இந்திய மாணவர்கள் ஏற்று நடத்துவோம் மற்று சமுதாய வளர்ச்சிக்காக சமுதாய சேவைப்பணிகளிலும் ஈடுப்படுவோம் என்று புதியதாய் தலைமைத்துவ பொருப்பேற்ற மாணவர் தலைவர் வினோட் ஜீவானந்தன் தெரிவித்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here