பாங்கி (Mytimes)) – (UKM) பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு சிறப்பு வழிக்காட்டி வழங்குவதாக தேசிய பல்கலைக்கழக இந்தியர் மாணவர் குழுமத்தின் தலைவர் பாஷன் சதாசிவம் (Mytimes) செய்தி பிரிவுக்கு தகவல் அளித்துள்ளார். வருடா வருடம் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் கிடைக்க பெற்ற இந்திய மாணவர்களுக்கு முறையான வகையில் விளக்கவுரை வழங்கி , அவர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளைப் பூர்த்தி செய்து, பல்கலைக்கழத்தில் சிறந்து விளங்க இம்மாணவர்களின் குழுமம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

பல்கலைகழத்தில் பதிவு செய்யும் முறை, கிடைக்கப்பெற்ற துறைகளைப் பற்றிய பொதுமான விளக்கமளிப்பு, பல்கலைக்கழத்தில் கிடைக்கப்பெற்ற துறைகளிலிருந்து வேறு துறை மாறுவதற்கான விண்ணப்ப முறைகள், கல்வி உபகாரநிதி ,கடனுதவி போன்றவற்றை விண்ணப்பிக்கும் வழிமுறைகள், இது போன்ற புதிய மாணவகளுக்கு தேவையான அணைத்து தகவல்களும் சிறப்பான முறையில் வழிகாட்டப்படும்.

மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்று இந்திய மாணவர்களின் உரிமை குரலாக விளங்குகின்றது இந்து பிரதிநிதித்துவச் சபை. தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் தொன்று தொட்டு பணியாற்றி வருகிறது இந்த இந்திய மாணவர் சபை. இந்திய பேராசிரியர்களை ஆலோசகர்ளாக துணைக்கொண்டு இந்திய மாணவர் வளர்சிசிக்காகவும் நலனுக்காகவும் 30 வருடங்கலாக நிலைத்து செயலாற்றி வருகிறது.

இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் ரீதியில் சிறந்த மாணவகளாக உருப்பெருவதற்க்கு உருதுணையாக இருக்கிறது இந்து பிரதிநிதித்துவச் சபை (PAH). கல்வி கேள்விகளில் மட்டும் அல்லாமல் அனைத்து ரீதியிலும் இந்திய மாணவர்கள், தேசிய மற்றும் உலகரீதியிலும் சிறந்து விளங்கி பெயர் பதிக்கவும் இது ஒரு நல்ல தலமாக அமைகிறது. மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்த பல முன்னால் இந்திய மாணவர்கள் இன்றும் தேசிய மற்றும் உலக ரீதியிலும் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகின்றனர், முக்கியமாக இவர்கள் அனைவரும் இந்த இந்து பிரதிநிதித்துவச் சபையின் அங்கத்தினர்களே.

பகடிவதை (RAGGING) பல்கலைகழகம் புகும் மாணவர்களிடம் முக்கியமாக இந்திய மாணவர்களிடம் நடத்தப்படுவதாக சில வதந்திகள் பரப்பப்ப்டுகின்றன. இது ஒரு பொய்யான தகவலாகும். பல்கலைக்கழகத்தில் எட்டிக்கு போட்டியாக செயல்படும் சில இந்திய மாணவர்கள் தமக்கென தனியொரு பலகலைக்கழக தங்கும் விடுதியின் மூலம் ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு  செயல்ப்பட்டு வருகின்றனர். பகடிவதை என்பது முற்றிலும் தேசியப் பலகலைக்கழத்தில் இல்லை, அதன் சட்டத்திற்கு புறம்பான ஒரு செயல், அதற்கு என்றும் பல்கலைக்கழத்தால் அங்கிகரிக்கப்பட்ட இந்து பிரதிநிதித்துவச் சபை வாய்ப்பு வழங்காது. எனவே புதிதாக பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்கள் இதுபோன்ற கூட்டத்தில் இணைந்து தேவையற்ற செயல்ப்பாட்டில் தங்களின் வருங்காலத்தை பாழாக்கிக்கொள்ளக்கூடாது.

மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பூர்வ, பேராசிரியர்களின் துணையோடும் தேசிய ரீதியில் அங்கிகாரம் கொண்ட இந்து பிரதிநிதித்துவச் சபை எனும் இந்திய மாணவர்கள் குழுமத்தில் இணைவதில்  புதிய மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் தொடர்ப்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தேசியப் பலகலைக்கழக இந்தியப் பேராசிரியர்களை நாடலாம் அல்லது இந்து பிரதிநிதித்துவச் சபை (PAH) குழுமத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, மொழி அடிப்படையிலும்,மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க பல முக்கிய வாய்ப்புகளும் வழங்கப்டுகின்றன. இந்திய மாணவர்களோடு மட்டும் இவர் இருந்து விடாமல், மற்ற இன மாணவர்களோடும் பழகி பல திறமைகளைக் கற்றுக்கொள்ளவும் பல நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. மாணவர் தலைமைத்துவத்தின் மூலம் முழுக்க முழுக்க மாணவர்களின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் வழிவகுப்பதே தலையாய கடப்படாக அமைகிறது.

எனவே மலேசிய தேசியப் பலகலைக்கழகம் கிடைத்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். பல்கலைக்கழத்தில் ஒரு தலைச்சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும், தேசிய ரீதியிலும் உலக ரீதியிலும் பெயர் பதித்து சாதனையாள்ராக உருப்பெற வேண்டும் எண்ணத்தோடு ஒருங்கிணைவோம் எங்களை முகப்புத்தகத்தின் மூலமும் தொடர்புக் கொண்டு தகவல் பெறலாம் (www.facebook.com/pahukm) அல்லது 017-3909528 இந்த எண்களின் மூலமும் பெற்றோர்களும் , தேசியப் பலகலைக்கழகம் கிடைத்த மாணவர்கள் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம்.புதிய மாணவர்களே, என்று மலேசிய தேசியப் பலகலைக்கழகத்தின் இந்து பிரதிநிதித்துவச் சபையின் தலைவர் சகோதரர் பாஷன் சதாசிவம் விளக்கமளித்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here